articles

img

அட்டகாசமான நூல் - இரா.முருகவேள்

அட்டகாசமான நூல்

புகழ் பெற்ற சோவியத் சிறுவர் நாவலான ‘மறைந்த தந்தி’ மீண்டும் வெளிவந்துள்ளது. அட்டகாசமான நூல். இப்போது கூட சுவாரஸ்யம் குறையாமல் அதைத் திரும்பவும் படிப்பேன். நண்பர்களின் குழந்தைகளுக்கு அதை ஜெராக்ஸ் எடுத்துக் கொடுப்பேன். இப்போது மீண்டும் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இரண்டு குட்டிப் பையன்களும் அவர்கள் அம்மாவும் டைகா காட்டில் இரண்டு மூன்று நாட்கள் சிக்கிக் கொள்ள நேர்கிறது. அதுதான் கதை. கதை முழுக்க குறும்பு, குறும்பு, குறும்பு  தான். ஒரு துளி கூட வயதுக்கு மீறிய சொல்லோ செயலோ இருக் காது.  இதை எழுதியவர் பெரும் புரட்சிகர இயந்திரமும், போர் வீரரு மான ஆர்காதிய் கைதார். இவ்வளவு ரசனையான, அழகியல் உணர்வு கொண்ட மனிதன் இயந்திரமாக எப்படி இருக்க முடியும்? சும்மா ஒரு  உரிமையுடன் செல்லமாகச் சொல்கிறேன். மூலநூலில் எழுத்துக்கு இணை யாக ஓவியங்களுக்கு முக்கியத்து வம் அளிக்கப் பட்டிருக்கும். அது அப்படியே தமிழ் நூலிலும் உள்ளது. தமிழ் பிரதிகள் ஐம்பது ஆண்டு பழ மை வாய்ந்தவை, அவற்றில் உள்ள ஓவி யங்கள் ஸ்கேன் செய்ய முடியாது என்பதால்  இந்நூலின் வங்க மொழிபெயர்ப்பில்  இருந்து ஓவியங்களை பதிப்பாளர் எடுத்துக் கொண்டிருக்கிறார். இதற்காக இந்நூலின் உலக மொழிபெயர்ப்புகள் எல்லாவற்றிலும் தேடி இருக்கிறார். பெரும்பாலும் சோவியத் நூலில் உள்ள படங்கள் தமிழில் வரும் போது சோபை இழந்து விடும். காரணம் நாம் வழக்கமாக 60, 70 ஜிஎஸ்எம் தாள் கொண்டு அச்சிடுவது தான். அது சரி வராது என்பதால் இந்நூல் 100 ஜிஎஸ்எம் தாள் கொண்டு அச்சிடப்பட்டுள்ளது. இத்தனையும் செய்து நூல் விலை ரூ.200தான். நூலின் தரம் அறிந்தவர் பதிப்பாளர். அவர் எடுத்துக் கொண்டிருக்கும் சிரமங்களை பார்த்தால் வியப்பாக இருக்கிறது. பதிப்பகத்தின் பெயர் குலுங்கா நடையான். குல்சாரிக்கு சிங்கிஸ் ஜத்மாத்தவ் கொடுத்த பெயர்.  நண்பர்கள் கட்டாயம் இந்நூலை வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுங்கள்.  ஒரு சிறுவர் இலக்கியம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நல்ல எடுத்துக் காட்டு இந்நூல். மறைந்த தந்தி  நூல் கிடைக்குமிடம் : குலுங்கா நடையான் பதிப்பகம், 9500040516 / விலை ரூ.200