articles

img

மாம்பழக் கூழ் ஜிஎஸ்டி குறைப்பில் அரசு அலட்சியம்

மாம்பழக் கூழ் ஜிஎஸ்டி குறைப்பில் அரசு அலட்சியம்

திண்டுக்கல் எம்.பி ஆர்.சச்சிதானந்தம் விமர்சனம்

புதுதில்லி, ஜூலை 30-  திண்டுக்கல்: மாம்பழக் கூழ் மீதான 12 சதவீத ஜிஎஸ்டி விகிதம் தமிழ்நாட்டு விவசாயிகளை கடுமையாக பாதித்து வருவதாகவும், இதை குறைக்க ஒன்றிய அரசு எந்த முயற்சியும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் கண்டனம் தெரிவித்துள்ளார்.   அதிக ஜிஎஸ்டி காரணமாக பானக (ஜுஸ்) நிறுவனங்களின் உற்பத்தியும் கிராக்கியும் குறைந்து மாங்காய் விவசாயிகளின் வரு மானம் பாதிக்கப்பட்டு வருவ தாகவும், இந்த முக்கியமான பிரச்ச னையை நிதி அமைச்சகம் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.  எம்.பியின் கேள்விகள்  ஆர். சச்சிதானந்தம் எம்.பி மக்களவையில் நட்சத்திரமில்லாத கேள்வி எண் 173 மூலம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம் மாம்பழக் கூழ் மீதான அதிகப்படியான ஜிஎஸ்டி குறித்து கேள்விகள் எழுப்பினார்.  அதிக ஜிஎஸ்டி வரி விகிதம்  காரணமாக பானக நிறுவனங் களின் கொள்முதல் குறைந்துள் ளது என்பதை அரசு அறிந்துள் ளதா? தமிழ்நாட்டில் மாங்காய் விவசாயிகளை பாதுகாக்க அரசு ஏதேனும் தகுந்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதா? மாம்பழக் கூழ் மீதான ஜிஎஸ்டி குறைப்பு குறித்து அரசு ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு ஏதே னும் முன்மொழிவு அனுப்பி யுள்ளதா என்பன போன்ற கேள்வி களை எழுப்பினார்.  நிதி அமைச்சகத்தின் பதில்  இதற்கு நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி பதிலளித்தார். ஜிஎஸ்டி விகி தங்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசு களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரை களின் அடிப்படையில் நிர்ணயிக்கப் படுவதாகவும், தற்போது மாம்பழக் கூழ் மீது 12 சதவீத ஜிஎஸ்டி விகிதம் நடைமுறையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.  தோட்டக்கலை வளர்ச்சி திட்டங்கள்: 2014-15 முதல் தோட்டக்கலை வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த திட்டம் (MIDH) நடை முறைப்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் மாங்காய் உள்பட தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் மேம்  பாட்டுக்கான பல்வேறு நடவடிக்கை களுக்கு உதவி வழங்கப்படுகிறது;  நடவுப் பொருட்கள் உற்பத்தி, மேம்பட்ட ரகங்களின் பரப்பளவு விரிவாக்கம், வயதான தோட்டங் களின் புத்துயிர் பெறுதல், பாது காக்கப்பட்ட சாகுபடி, நீர்வளங்கள் உருவாக்கம், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, இயற்கை விவசாயம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு உதவி வழங்கப்படுவதாக அமைச் சர் விளக்கினார்.  மாங்காய் உள்பட தோட்டக்கலை பயிர்களின் பரப்பளவு விரிவாக்கத் திற்கு ஒரு பயனாளிக்கு அதிக பட்சம் 2 ஹெக்டேர் வரை அதிகபட்ச செலவில் 40 சதவீத உதவி வழங்கப் படுவதாகவும், வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்களில் 50 சதவீத உதவி வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.  ஜிஎஸ்டி மறுஆய்வு குழு: செப்டம்பர் 17, 2021 அன்று நடை பெற்ற 45வது கூட்டத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் வரி விகித பகுத்தறிவு குறித்த அமைச்சர்கள் குழுவை அமைத்துள்ளதாகவும், இந்த குழுவின் பணிகளில் சிறப்பு விகிதங்கள் உள்பட தற்போதைய ஜிஎஸ்டி வரி அளவு கட்டமைப்பின் மதிப்பாய்வு அடங்கும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.  எம்.பியின் விமர்சனம்  திண்டுக்கல் எம்.பி ஆர். சச்சி தானந்தம் அமைச்சகத்தின் பதிலில் அதிருப்தி தெரிவித்துள்ளார். “எனது கேள்விகளுக்கு அமைச்சகம் நேரடியான பதில் அளிக்கவில்லை. வெறும் கணக்குகளையும் பொது வான திட்டங்களையும் பட்டியலிட்டு சமாளித்துள்ளது” என்று எம்.பி கூறியுள்ளார். மாம்பழக் கூழ் மீதான ஜிஎஸ்டி குறைப்பு குறித்து ஜிஎஸ்டி கவுன்சி லுக்கு குறிப்பிட்ட முன்மொழிவு அனுப்பப்படவில்லை என்பது தெளி வாகிறது என்று அவர் சுட்டிக்காட்டி னார். “2021இல் பொதுவான அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் மாம்பழக் கூழ் ஜிஎஸ்டி குறைப்பு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று கண்டனம் தெரிவித்தார்.  மாம்பழக் கூழ் மீதான அதிக ஜிஎஸ்டி காரணமாக பானக நிறு வனங்களின் கொள்முதல் குறைந்துள்ளது என்ற முதல் கேள்விக்கு அமைச்சகம் நேரடி யான பதில் அளிக்கவில்லை என்று எம்.பி குற்றம்சாட்டினார். “மாம்பழக் கூழ் பயன்படுத்தி ஜூஸ், மில்க் ஷேக், ஐஸ்கிரீம் போன்ற பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் கொள்முதல் குறைவதால் மொத்த தொழிலுமே பாதிக்கப்படுகிறது” என்று விளக்கினார்.  தமிழ்நாட்டில் மாங்காய் விவ சாயிகளுக்கு குறிப்பிட்ட பாது காப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சகம் தெளிவான பதில் அளிக்கவில்லை என்று எம்.பி  கூறினார். “கிருஷ்ணகிரி, சேலம்,  திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங் களில் ஆயிரக்கணக்கான விவ சாயிகள் சாகுபடியில் ஈடுபட்டுள்ள னர். அவர்களின் வருமானம் பாதிக்கப்படுவது ஒன்றிய அரசுக்கு கவலையில்லை என்பது தெளிவாகிறது” என்று விமர்சித்தார்.  12 சதவீத ஜிஎஸ்டி நியாய மற்றது: அத்தியாவசிய உணவுப் பொரு ளான மாம்பழக் கூழ் மீது 12 சதவீத ஜிஎஸ்டி நியாயமற்றது என்று எம்.பி கூறினார். “இது விவசாயிகளின் வருமானத்தை நேரடியாக பாதிக்கிறது. அதிக ஜிஎஸ்டி காரணமாக நிறுவனங்கள் மலிவான மாற்று பழச்சாறுகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது” என்று கூறினார்.  அரசின் பொறுப்பு தட்டிக் கழிப்பு: ஜிஎஸ்டி கவுன்சிலில் மாநில அரசுகளும் பங்கேற்கின்றன என்று கூறி ஒன்றிய அரசு தனது பொறுப்பை தட்டிக்கழித்துள்ளது என்று எம்.பி குற்றம்சாட்டினார். “விவசாயிகளின் நலனுக்காக ஒன்றிய அரசு முன்முயற்சி எடுக்க வேண்டும். வரி கொள்கைகள் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அமைய வேண்டும்” என்று வலியுறுத்தினார்