tamilnadu

img

சிறு கடைகள் உரிமம் பெற தேவையில்லை - தமிழ்நாடு அரசு

சிறு தொழில் - சிறு கடைகள் உரிமம் பெற தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கிராமப்பகுதிகளில் உள்ள சிறு, குறு கடைகள், கட்டணம் செலுத்தி உரிமம் பெறுவது கட்டயாம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்த சட்டத்தின்படி, நகர்ப்புறம் அருகில் உள்ள கிராம பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து என இரு வகையாக பிரிக்கப்பட்டது. அதேபோல, தொழில்களை உற்பத்தி மற்றும் சேவைகள் என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் ரூபாய் முதலீட்டுக்கு உட்பட்ட தொழில்களுக்கு தொழில் மற்றும் கிராம பஞ்சாயத்துக்கு ஏற்ற வகையில் 250 ரூபாய் முதல் 3 ஆயிரம் வரை லைசன்ஸ் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. 5 லட்சம் முதல் 2 கோடியே 50 லட்சம் வரையிலான முதலீடு உள்ள தொழில்களுக்கு 750 ரூபாய் முதல் 5 ஆயிரம் வரையும், அதற்கு மேற்பட்டவைகளுக்கு 35 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாயும் லைசன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும். அதன்படி, டீக்கடைகள், ஹோட்டல்கள், இறைச்சி கடைகள், சலவை கடைகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட 48 தொழில்கள் பட்டியலிடப்பட்டன.  
சிறு கடைகளுக்கும் கூட கட்டாயமாக உரிமம் பெற வேண்டும் என்ற அரசாணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வணிகர் சங்க பேரமைப்பு மற்றும் சிபிஎம் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு, சிறு தொழில் - சிறு கடைகள் உரிமம் பெற தேவையில்லை என்று அறிவித்தது.