திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ராஜூ பிஸ்வகர்மாவை ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கத்தில் 4 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி, கடந்த ஜூலை 12 ஆம் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பும் வழியில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பலத்த காயமடைந்த சிறுமிக்கு மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், உடனடியாக சிறப்பு போலீஸ் குழு 30க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் விசாரணை மேற்கொண்டது. சுமார் 75 சிசிடிவி காட்சிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு 300 மேற்பட்ட நபர்களிடம் விசாரிக்கப்பட்டது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு பிறகு ஜூலை 25ஆம் தேதி அசாம் மாநிலத்தை சேர்ந்த ராஜு பிஸ்வகர்மாவை ஆந்திர மாநிலம் சுல்லூர்பேட்டை பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ராஜு பிஸ்வகர்மாவிற்கு தொடக்கத்தில் 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டது, தற்போது 3 நாட்கள் விசரணை முடிந்து பிஸ்வகர்மாவை போலீசார் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்
இதனையதுத்து ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை பிஸ்வகர்மாவை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.