சேலம், மார்ச் 4- தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் மாவட்ட சமூக நலத்துறையின் சார் பில் பெண்களுக்கு எதி ரான வன்முறை தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியானது, சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் நடை பெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் மாவட்ட சமூக நலத் துறையின் சார்பில் நடைபெற்ற பெண் களுக்கு எதிரான வன்முறை தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தலைமையேற்று ஞாயிறன்று கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார். இப்பேரணியானது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி கடைவீதி ரோடு, திருவள்ளுவர் சிலை, பழைய பேருந்து நிலைய சாலை பிரிவு, மாநகராட்சி அலுவலக வளாக சாலை, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சாலை ரவுண்டான வழியான மீண்டும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் வந்த டைந்தது.
இப்பேரணியில் நேசகரங்கள் ஆதரவற் றோர் குழந்தைகள் காப்பகம், லோட்டஸ் குழந்தைகள் காப்பகம், ஒய்.டபுள்யு.சி.ஏ காப்பகம், கிராம சேவிக, முக்தி சேவிக சேவகர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப் பினர்கள், சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட துறை அலுவலக பணியாளர்கள் என 300 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பேரணியில் மாவட்ட சமூக நல அலு வலர் கார்திகா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பரிமளாதேவி, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) சண்முகவள்ளி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஷ்வரி உள்ளிட்ட அரசு துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.