ஆங்கில செய்தி ஊடகமான ராய்ட்டர்ஸ் (Reuters) இன் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஆங்கில செய்தி ஊடகமான ராய்ட்டர்ஸ் (Reuters) இன் அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கம் மற்றும் ராய்ட்டர்ஸ் வேர்ல்ட் (Reuters world) எக்ஸ் பக்கம் ஆகியவை அரசின் கோரிக்கையின் பேரில் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது என எக்ஸ் நிறுவனத்தின் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்நிறுவனத்தின் ராய்ட்டர்ஸ் தொழில்நுட்ப செய்திகள், ராய்ட்டர்ஸ் உண்மைச் சரிபார்ப்பு, ராய்ட்டர்ஸ் ஆசியா, ராய்ட்டர்ஸ் சீனா ஆகியவற்றின் எக்ஸ் பக்கங்கள் முடக்கப்படவில்லை.
இதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ராய்ட்டர்ஸ் எக்ஸ் பக்கத்தை முடக்க அரசு கோரவில்லை என்றும், அதனை சரி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஆபரேசன் சிந்தூர் சமயத்தில் ராய்ட்டர்ஸ் எக்ஸ் பக்கத்தை ஒன்றிய அரசு கோரியதாகவும், பழைய கோரிக்கையை ஏற்று தற்போது எக்ஸ் நிறுவனம், ராய்ட்டர்ஸ் (Reuters) இன் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டிருக்கலாம் என்று செய்திகள் வெளியாகி வருகிறது.