headlines

img

பெட்ரோலிய அமைச்சரை பதவி நீக்கம் செய்க!

பெட்ரோலிய அமைச்சரை பதவி நீக்கம் செய்க!

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு என்பது தேசத்தின் முதுகெலும்பு போன்றது. குறிப்பாக,  மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ள நிலையில், இதுகுறித்த விவாதங்கள் நாடாளு மன்றத்தில் ஆக்கப்பூர்வமாக அமைந்திருக்க வேண்டும். ஆனால், வியாழக்கிழமை  மக்கள வையில் அரங்கேறிய நிகழ்வுகள் அதிர்ச்சியை யும், கவலையையும் அளிப்பதாக உள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய புகார்கள் சாதாரணமானவை அல்ல. நாட்டின் எரிசக்தித் தேவையில் இந்தியா தன்னாட்சி அதிகாரத்துடன் முடிவெடுக்க முடி யாமல், அமெரிக்கா போன்ற நாடுகளின் நிழலில் ஒதுங்குவது ஏன் என்ற ‘புதிர்’ குறித்தே அவர் பேசினார். இந்த விவாதத்தின் ஒரு பகு தியாக, பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரிக்கும், சர்வதேச அளவில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டினுக் கும் இடையே இருந்ததாகக் கூறப்படும் தொடர்புகளை அவர் சுட்டிக்காட்டியது அவை யில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

நாட்டின் முதன்மை முக்கியத்துவம் வாய்ந்த துறையை நிர்வகிக்கும் அமைச்சரின் தனிப் பட்ட தொடர்புகள் மற்றும் அவரது குடும்பத்தி னர் மீது சுமத்தப்படும் புகார்கள் தேசத்தின் பாது காப்புடன் நேரடித் தொடர்புடையவை. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அனுமதித்தால் மட்டுமே ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க முடியும் என்ற நிலை உருவானதற்குப் பின்னால் ஏதேனும் ‘சமரசம்’ உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தான் எப்ஸ்டி னின் “நண்பர்” என ஒப்புக்கொண்டதாக எழுந் துள்ள குற்றச்சாட்டு, அவரது அமைச்சர வைப் பதவியின் மாண்பைக் கேள்விக்குறி யாக்குகிறது. சர்ச்சைக்குரிய நபர்களுடன் அமைச்சருக்குத் தொடர்பு இருப்பதா கக் கூறப்படும் நிலையில், அவர் அப்பதவியில் நீடிப்பது முறையல்ல. அமைச்சர் மீதான இத்த கைய கடுமையான புகார்கள் குறித்து முறை யான விசாரணை தேவை. குற்றச்சாட்டுகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். உண்மைகள் வெளிவரும் வரை அவர் பதவியில் நீடிப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கும், நாட்டின் பாது காப்பு நலன்களுக்கும் எதிரானது.

நாட்டின் இறையாண்மையை அடகு வைத்து, சர்வதேசக் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறப்படும் ஒருவர், அமைச்சரவையில் நீடிப்பது தேசப் பாதுகாப் புக்கே அச்சுறுத்தலாகும். மக்கள் எரிவாயு தட்டுப் பாட்டால் வீதியில் நிற்கும் வேளையில், தனிப் பட்ட ஆதாயங்களுக்காகக் கொள்கைகளை வளைப்பதாக எழும் புகார்களுக்குப் பதில ளிக்காமல், விவாதங்களைத் தட்டிக்கழிப்பது ஜனநாயகப் படுகொலை. எனவே அமைச்சரை உடனடியாகப் பதவியிலிருந்து விலக்க வேண்டும்.