tamilnadu

img

ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு!

ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில், திட்டத்தின் பதிவு என் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில், ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில், திட்டத்தின் பதிவு என், கியூ.ஆர் கோடு, குழும முகவரி இடம்பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் விளம்பரங்களில் 100+ வசதிகள் என்று பொதுவாக போடாமல், எனென்ன வசதிகள் இருக்கின்றன என்பதை முழுமையாக தெரிவிக்க வேண்டும்; குறிப்பிட்ட பகுதியில் இருந்து இவ்வளவு நேரத்தில் சென்றுவிடலாம் என்றெல்லாம் விளம்பரங்கள் செய்யக் கூடாது, எவ்வளவு தூரம் என்று மட்டும் குறிப்பிடலாம் என கட்டுப்பாடு.