வெள்ளாளவிடுதி அரசு விவசாயப் பண்ணையை மேம்படுத்த வேண்டும்
மாதர் சங்க ஒன்றிய மாநாடு வலியுறுத்தல்
புதுக்கோட்டை, ஜூலை 6 - புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட் டையை அடுத்த வெள்ளாளவிடுதி அரசு விவசாயப் பண்ணையை மேம்படுத்த வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. ஜனநாயக மாதர் சங்கத்தின் கந்தர்வ கோட்டை தெற்கு ஒன்றிய மாநாடு கந்தர்வ கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. மாநாட்டிற்கு ஒன்றியத் தலைவர் எஸ்.அன்புக்கரசி தலைமை வகித்தார். எல்.பாப்பாத்தி கொடியேற்றினார். பி.வன ரோஜா வரவேற்றார். எஸ்.ஹேமலதா அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநாட்டை தொடங்கி வைத்து மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி பேசினார். ஒன்றியச் செயலாளர் கே.சாந்தி வேலை அறிக்கையை முன்வைத்தார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன், மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் ஜெ.வைகைராணி, மாவட்ட துணைத் தலைவர் வி.இளவரசி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து மாவட்டச் செயலாளர் பி.சுசிலா உரையாற்றி னார். தலைவராக எஸ்.அன்புக்கரசி, செய லாளராக கே.சாந்தி, பொருளாளராக கே.லதா, துணைத் தலைவராக பி.வனரோஜா, துணைச் செயலாளராக எம்.சித்ரா உள்ளிட்ட 11 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. துஷாரா நன்றி கூறினார். கந்தர்வகோட்டையை அடுத்த வெள்ளா ளவிடுதி அரசு விவசாயப் பண்ணையை மேம்படுத்த வேண்டும். கந்தர்வகோட்டை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடு மைகளை தடுத்து நிறுத்த வேண்டும். சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும். கந்தர்வகோட்டை தாலுகா வில் புதிய தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.