tamilnadu

img

புதுச்சேரியில் 85,531 வாக்காளர்கள் நீக்கம்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியலில் 85,531 (10.05%) வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி படி, மொத்த வாக்காளர் எண்ணிக்கை 8.51,775 ஆக இருந்தது. இதில், ஆண் வாக்காளர்கள் 3,99,771 பேரும், பெண் வாக்காளர்கள் 4,51,869 பேரும், மாற்று பாலினத்தவர் 135 பேரும் இருந்தனர். இந்த நிலையில், கடந்த நவம்பர் 4-ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) மேற்கொள்ளப்பட்டு வந்தது. இப்பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 85,531 (10.05%) வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 
இதில் இறந்த வாக்காளர்கள் 16171 பேரும், சம்பந்தப்பட்ட முகவரியில் இல்லாமல் தொடர்பு கொள்ள முடியாதவர்கள், முகவரி மாறி சென்றவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள் 70,643 பேரும் நீக்கப்பட்டுள்ளனர்.
தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருந்தால் வரும் ஜன.15ஆம் தேதி வரை பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என மாநில தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் அறிவித்துள்ளார்.