தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 23ஆம் தேதி அரையாண்டு தேர்வு முடியவுள்ளது. இந்நிலையில் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 4ஆம் தேதி வரை 12 நாட்கள் அரையாண்டு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
