tamilnadu

img

ஆர்.எஸ்.எஸ் என்னும் விஷக்கிருமியை ஒழித்தே தீருவோம் - நாராயணன் திருப்பதிக்கு பெ.சண்முகம் பதிலடி!

கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை குறித்து இந்தியாவில் கம்யூனிசம் என்னும் நோய்க்கிருமி முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என விமர்சித்த பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதிக்கு சிபிஎம் மாநிலச்செயலாளர் பெ.சண்முகம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.
திருவனந்தபுரம் மாநகராட்சித் தேர்தலில் எல்.டி.எஃப் (LDF) பெற்றிருக்கும் வாக்குகள் 1,67,801. என்.டி.ஏ (NDA) பெற்றிருக்கும் வாக்குகள் 1,65,055. இதைக் கொண்டாடுவது உங்கள் விருப்பம். அதற்காக, 'இந்தியாவில் கம்யூனிசம் என்னும் நோய்க்கிருமி முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது' என்று கூறியிருப்பது மூடத்தனத்தின் உச்சம்.
கம்யூனிசம் என்பது சமூக அறிவியல். அதை யாராலும் ஒழிக்க முடியாது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் என்னும் விஷக்கிருமியை ஒழித்தே தீருவோம். ஏனென்றால், அது மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய போற்றுதலுக்குரிய கோட்பாடுகளுக்கு எதிரானது. என பெ.சண்முகம் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்