பொங்கல் போனஸ் ரூ.5ஆயிரம் கேட்டு கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்கள்
பொங்கல் தொகுப்புடன் ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொன்னேரியில் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு கட்டுமான சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.சி.சீனு தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் எஸ்.எம்.அனீப், கே.அர்ஜுனன், எம்.சந்திரசேகரன், வி.ஆர்.லட்சுமணன், எம்.நாகராஜன், இ.ரங்கன் ஆகியோர் பேசினர்.
திருவள்ளூர் டோல்கேட் அருகில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுமான சங்கத்தின் மாவட்ட செயலாளர் இ.வேலன் தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் ஏ.ஜி.சந்தானம், மாவட்ட நிர்வாகிகள் கே.ராஜேந்திரன், டி.கணேசன், எம்.மணி உட்பட பலர் பேசினர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் செங்கை எம்ஜிஆர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.பாபு தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்ட தலைவர் பி.மாசிலாமணி, மாவட்ட செயலாளர் க.பகத்சிங் தாஸ், கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநில துணை செயலாளர் எம்.கலைச்செல்வி, மாவட்ட செயலாளர் வி.திருமலை உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் மாலதி சிட்டிபாபு பேசினார்.
வேலூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் ஏ.பழனியப்பன் தலைமையிலும், குடியாத்தத்தில் மாவட்ட துணை செயலாளர் எம்.ராஜா தலைமையிலும் ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் கே.கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன் மாவட்ட நிர்வாகிகள் எம்.காசி,வி.நாகேந்திரன், முல்லை வாசன், ஆர்.மகாதேவன், கே. முருகானந்தம் (ரயில்வே ஓய்வு) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
