புதிய தெருவிளக்குகள் அமைக்க டெண்டர் விடப்பட்டும் பணிகள் துவங்காதது ஏன்? விருதுநகர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி
விருதுநகர் ,மார்ச் 6- டெண்டர் விடப்பட்டு பல நாட் கள் ஆகியும் பணிகள் தொடங்கு வதில் தாமதம் ஏன்? என்று விருது நகர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சி லர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி னர். விருதுநகர் நகராட்சியின் சாதா ரண மற்றும் அவசரக் கூட்டம் நகர் மன்ற தலைவர் ஆர். மாதவன் தலைமையில் நடைபெற்றது. நக ராட்சி ஆணையாளர் விஜயகுமார், பொறியாளர் பிரபாகரன், துணைத் தலைவர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வைத்தனர். அப்போது நடைபெற்ற விவா தம் வருமாறு: புதிய பேருந்து நிலையத்தில் கடைகள் வாடகை க்கு விடப்படும். ஏன் நகர்மன்றத்தின் அனுமதிக்கு ஒப்புதல் வரவில்லை என்று உறுப்பினர் கலையரசன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த தலைவர் ,அதில் சில விவரங்கள் கேட்க வேண்டி உள்ளது. ஆகவே கால தாமதம் என்றார். புதிய தெருவிளக்கு அமைப்ப தற்கான டெண்டர் விடப்பட்டும் ஏன் பணிகள் தொடங்கவில்லை என்று உறுப்பினர்கள் ஜெயக்குமார், மதியழகன் ஆகியோர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஆணையாளர் .திட்ட மதிப்பீடு பற்றி ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. அதன் பிறகு பணிகள் வழங்கப் படும் என்றார். குடியிருப்புகளுக்கு எவ்வித அறிவிப்பும் இன்றி திடீ ரென சொத்து வரிகளை ஏன் உயர்த்தியுள்ளீர்கள்- வீடுகளை ஆய்வு செய்யாமல் வரிகள் உயர்த்தப்பட்டுள்ளது என உறுப்பி னர்கள் ராஜ்குமார் ,ராமலட்சுமி, சர வணன் ஆகியோர் தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த ஆணை யாளர், சில வணிக பயனபாடாக மாறி இருந்தால் சொத்து வரி உயரும். குடியிருப்பாக இருந்தால் ரசீதை கொண்டு வாருங்கள் சரி செய்து தரப்படும் என்றார். சங்கரநாராயணன் தெருவில் இரண்டு வீடுகள் மண் மேடாகி விட்டன. அதற்கும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது .இது குறித்து பலமுறை தெரிவித்தும நடவ டிக்கை இல்லை என உறுப்பினர் ஜெயக்குமார் பேசினார். காலி இடமாக இருந்தால் அதற்குரிய வரியை மட்டும் செலுத்தினால் போதும். நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் பதிலளித்தார். ஒவ்வொரு கூட்டத்திலும் உறுப்பி னர்கள் ஏராளமான குறைகளை சொல்கின்றனர். அதை அடுத்த கூட்டத்திற்குள் நகராட்சி அதிகாரி கள் சரி செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதில்லை. இனி வரும் காலத்திலாவது குறைகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் என உறுப்பினர் ஆறு முகம் தெரிவித்தார். குப்பைகளை வண்டிகளில் வாங்குவதால் காலதாமதம் ஏற்படு வதோடு சுகாதாரப் பணிகளுக் கான பேட்டரி வாகனங்கள் என்ன ஆச்சு? என உறுப்பினர்கள் முத்து ராமன், கலையரசன், உமாராணி உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர். பேட்டரி வண்டிகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் பதில் கூறினார். முன்னதாக இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர். நலக்கண்ணு மற்றும் தற்காலிக நகராட்சி பணியாளர்கள் மறைவிற்கு கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.