tamilnadu

100 நாள் வேலை கோரி திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

100 நாள் வேலை கோரி திருப்புவனம் ஊராட்சி  ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

சிவகங்கை, மார்ச் 6- 100 நாள் வேலை வழங் கக்கோரி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தை கிராமப்புற பெண்கள் முற்றுகையிட்டனர். 100 நாள் திட்டத்தின் கீழ் திருப்புவனம் ஊராட்சி முக்குடி ஊராட்சியில் இருந்து செங்குளம் கண்மாய் வரத்து கால்வாய்  தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இதில் செங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர். தினசரி பணிக்கு வருபவர்களை பணித்தள பொறுப்பாளர் கள் அலைபேசியில் புகைப் படம் எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். தினசரி காலை மற்றும் மதியம் என இரு வேளை பதிவேற்றம் செய்தால் மட் டுமே பணிபுரிபவர்களின் வங்கிக்கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும், தினசரி ஒவ்வொரு நபருக்கும் 290 ரூபாய் முதல் 336 ரூபாய் வரை சம்பளம் வரவு வைக்கப்படும். கடந்த நான்கு நாட்க ளாக பணிக்கு வந்தவர் களை படம் எடுத்தாலும் அப்டேட் செய்யவே முடிய வில்லை. இதனால் வருகை தந்தவர்களுக்கு வேலை சம்பளம் இல்லை என திருப்பி அனுப்பியுள்ளனர்.  இதனால் கோபமடைந்த கிராம மக்கள் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தை முற்றுகையிட்டனர். அதிகாரிகளிடம் வேலை வழங்கப்படாதது குறித்து முறையிட்டனர். உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதி யளித்த பின் கலைந்து சென்றனர். பணித்தளப் பொறுப்பா ளர்கள் கூறுகையில், சொந்த அலைபேசியில் குறிப்பிட்ட செயலியை டவுன்லோடு செய்துள்ளோம். தினசரி வருகைப் பதிவேட்டை அப்டேட் செய்யவே முடிய வில்லை.  வெயில் காரணமாக அலைபேசி விரைவில் சூடேறி விடுகின்றன. செங் குளம் போன்ற சற்று உள்ள டங்கிய பகுதிகளில் நெட் வொர்க் கிடைப்பதில்லை என்றனர்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செய லாளர் வீரபாண்டி கூறுகை யில், சிவகங்கை மாவட்டத் தில் பல்வேறு கிராமங்களில் செல்போன் நெட்வொர்க் வேலை செய்யாததால் பணி செய்தும் பணம் கிடைக்காத சூழ்நிலை ஏற் பட்டுள்ளது.  இது தொடர்பாக உரிய நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள வேண்டும் என்று மனு கொ டுத்துள்ளார்.