tamilnadu

img

இளம் செஞ்சிலுவை சங்கம் துவக்க விழா  

இளம் செஞ்சிலுவை சங்கம் துவக்க விழா  

திருவில்லிபுத்தூர், மார்ச் 6- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம் செஞ்சிலுவை சங்கம் துவக்க விழா மற்றும்  மாணவர்களுக்கு மன நலம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் முனைவர்.சுப சரவணன்  தலைமையேற்றி நடத்தி வைத்தார். இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் பே.ரவி வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் சுப  சரவணன் தலைமை உரையாற்றினார்.  மாவட்ட இளம் செஞ்சிலுவை சங்க  ஒருங்கிணைப்பாளர் முனைவர் மீனாட்சி சிறப்புரையாற்றினார். மனநல நிபுணர்  தேஜாஸ்ரீ கருத்துரையாற்றினார்.