தமிழகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வையுடன் முதலமைச்சர் செயல்படுகிறார்
காளையார்கோவில் அரசு விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு
சிவகங்கை,மார்ச் 6- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 6 அன்று உங்க கனவை சொல்லுங்க திட்டத்தின் நிறைவாக ‘தமிழ்நாடு - 2030 கனவு கள் மெய்ப்படும்” என்ற நிகழ்ச்சி யில் ஐந்தாண்டு சாதனைகள் குறித்த சிறப்புரையாற்றும் நிகழ்ச்சி சென்னையிலிருந்து காணொ லிக்காட்சி மூலம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சிவ கங்கை மாவட்டம், காளையார் கோவில் வட்டத்திற்குட்பட்ட புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி க்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கா. பொற்கொடி தலைமை வகித்தார். தமிழக கூட்டுறவுத்துறை அமைச் சர் கேஆர்.பெரியகருப்பன் பங்கேற்றுப் பேசியதாவது: பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்தது மட்டுமின்றி, அவர் களின் கனவுகளையும் நிறை வேற்றுகின்ற வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் “உங்க கனவ சொல்லுங்க”, என் ஊர் என் கனவு, என் கனவு என் எதிர் காலம் போன்ற பல்வேறு புதிய திட்டங்கள் தொடங்கி வைக்கப் பட்டு, மக்களிடையே தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்து கேட்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து, வளமான தமிழ்நாட்டிற்கான வளர்ச்சிப் பாதையை வகுத்திடும் நோக்கில், ”தமிழ்நாடு 2030 கனவு கள் மெய்ப்படும்” என்ற திட்டம் இன்றையதினம் தமிழ்நாடு முதல மைச்சரால் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. பல்வேறு திட்டங்க ளின் வாயிலாக மக்கள் சொன்ன கருத்துகளை அடிப்படையாக வைத்து, அதில் முக்கியமான வற்றை எல்லாம் முன்னனுரி மைப்படுத்தி, தமிழ்நாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான தொலை நோக்கு பார்வையுடன் முதல மைச்சர் தமிழ்நாடு 2030-ஐ நோக்கி 14 முக்கிய அம்சங்களை அறி வித்தார். இதுபோன்று, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, தமிழக மக்கள் அனைவரின் கனவு களையும் நிறைவேற்றும் அரசாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு திகழ்ந்து வருகிறது. மேலும், சிவகங்கை மாவட்டத்தில் திட்ட செயல்பாடு கள் மற்றும் பயன்கள் குறித்து, தொகுக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு சாதனை மலரினையும் இந்நிகழ்ச்சி யின் வாயிலாக வெளியிடப்படு கிறது. இவ்வாறு அமைச்சர் பேசி னார். முன்னதாக, காளையார்கோ வில் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட பேருந்து நிலையத்தில் சிவகங்கை முதல் கீழமுடிக்கரை வழித்தடம் மற்றும் சிவகங்கை முதல் சிறியூர் வழித்தடம் (வழி- பொருசடி உடைப்பு) ஆகிய 2 வழித்தடங்களுக்கான 2 புதிய மகளிர் விடியல் பயண பேருந்து களை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் மகளிர்க ளின் பயன்பாட்டிற்கென கொடிய சைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மரு.ஜி.அரவிந்த், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) யஅனீஷ் சத்தார், புனித மைக்கேல் கல்வி குழும தலைவர் முனைவர் எம்.ஸ்டாலின் ஆரோக்கியராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
