ஆங்காங்கே குண்டுகள், ஏவுகணைகள் வெடிக்கும் சத்தம் துபாயில் இருந்து சென்னை திரும்பியவர்கள் பேட்டி
சென்னை, மார்ச் 6- துபாயில் கணவருடன் வசித்து வந்த சென்னை பூந்தமல்லியை சேர்ந்த வைஜெயந்தி, இந்திய தூதரகம் மூல மாக சென்னை வந்து சேர்ந்தது மகிழ்ச்சி யாக உள்ளது என்று கூறினார். என்னுடைய கணவர் துபாயில் இருக்கிறார். அவரும் அடுத்த விமானத்தில், இங்கு வந்துவிடுவார் என்று சென்னையில் செய்தியாளர் களிடம் கூறினார். துபாயில் வீடுகளின் மேலேயே, விமானங்கள் பறந்து கொண்டு, பயங்கரமான சத்தமாக இருந்தது. 3 நாட்களாக இரவில் தூங்க முடியாமல் தவித்தோம். தற்போது பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டோம் என்றார். துபாய் விமான நிலையத்தில் எந்தப் பகுதியில் தாக்குதல் நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் பதற்ற மாகவும், பரபரப்பாகவும் இருந்தது. மின்சாரத்தை தடை செய்திருந்தார்கள். நாங்கள் இருளிலேயேதான், தவித்துக் கொண்டிருந்தோம். 3 நாட்களுக்கு பிறகு விமானத்தில் அமர்ந்ததும், நிம்மதியடைந்தோம். துபாய்க்கு சுற்றுலா சென்று சிக்கிய கோயம்பேட்டை சேர்ந்த கார்த்திக் கூறுகையில், குடும்பத்துடன் துபாய்க்கு சுற்றுலா சென்றோம். கடந்த 28-ம் தேதி சென்னைக்கு திரும்ப, துபாயிலிருந்து விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தோம். அன்று மாலை, துபாய் விமான நிலை யத்துக்கு வந்தபோது, போர் காரண மாக விமானம் ரத்து செய்யப்பட் டுள்ளதாகத் தெரிவித்தனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தோம். பின்னர், துபாய் விமான நிலையத்துக்கு அருகே உள்ள ஒரு ஓட்டலில் தங்கினோம். அன்று இரவு முழுவதும் போர் விமானங்கள் பறந்து கொண்டிருந்தன. ஆங்காங்கே குண்டு கள், ஏவுகணைகள் வெடிக்கும் சத்தம் அதிகமாகக் கேட்டது. இதனால் நாங்கள் மிகுந்த அச்சம் அடைந்தோம் என்றார்.
