tamilnadu

img

கோவில் நிலங்களில் வசிப்போருக்கு வாரிசு பெயர் மாற்றம் செய்ய அரசு வழிகாட்டுதல் தருக: பெ.சண்முகம்

கோவில் நிலங்களில் வசிப்போருக்கு வாரிசு பெயர் மாற்றம் செய்ய அரசு வழிகாட்டுதல் தருக: பெ.சண்முகம்

சென்னை, மார்ச் 6 - அறநிலையத்துறை நிலத்தில் வசிப்போருக்கு வாரிசு பெயர் மாற்றம் செய்து தர அலுவலர்க ளுக்கு அரசு வழிகாட்டுதல் வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் பெ.சண்முகம் வலி யுறுத்தி உள்ளார். இந்துசமய அறநிலை யத்துறை நிலங்களில் வசிப்போருக்கான வாட கையை குறைக்க வலி யுறுத்தி தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாது காப்பு சங்கம், தமிழ்நாடு கோவில் மனையில் குடி யிருப்போர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தின. இதன் தொடர்ச்சியாக வீட்டு வாடகையை 50 விழுக்காடு, வறுமைக் கோட்டிற்கும் கீழே வாழும் குடும்பங்களுக்கு 75 விழுக்காடு குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த வாடகை குறைப்பு, ஏற் கெனவே வாடகை உயர்த்தப்பட்ட 2016ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலி ருந்து அமலாக்கப்படும். ஏற்கெனவே, கூடுதலாக செலுத்திய வாடகை, எதிர் கால வாடகையில் ஈடு செய்யப்படும் என்று அறி வித்துள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசுக்கு வியாழனன்று (மார்ச் 5) சென்னையில் பாராட்டு விழா நடை பெற்றது. தமிழ்நாடு கோவில் மனையில் குடியிருப்போர் சங்கத்தின் தலைவர் வி.அ.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பெ.சண்மு கம் பேசியதன் சுருக்கம் வரு மாறு: 2016ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வாடகை  உயர்த்தப்பட்டது. அன்றைய நாளிலிருந்து வாடகையை குறைத்து அரசாக வெளியிட்டிருப்பது சாதாரண விஷயம் கிடை யாது. கோவில்மனைகளில் குடியிருப்போருக்கு மிகப்பெரிய விடுதலையை அரசு கொடுத்துள்ளது. எனவே அரசையும், துறை அமைச்சரையும் பாராட்டு கிறோம். இதற்காக பிப்.4 அன்று சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டி யன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் உள்ளிட்டோருடன் சென்று தலைமை செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தோம். இருப்பினும், அரசு மேலும் சில கோரிக்கை களை பரிசீலிக்க வேண்டும். வீட்டின் ஒரு பகுதியில் கடை வைத்திருந்தால் அந்த கட்டிடம் முழுமைக்கும் வணிக ரீதியாக வாடகை வசூலிப்பது நியாயமற்றது. வணிக நிறுவனத்திற்கு இணையாக வீடுகளுக்கும் வாடகை விதிக்க கூடாது. வணிகம் செய்யும் பகுதிக்கு மட்டும் சிறிது வாடகையை உயர்த்தி வசூலிக்க வேண்டும். வாரிசு பெயர் மாற்றம் செய்து தர கோவில் நிர்வாக அலுவலர்கள் அலைகழிக் கின்றனர். அதனை நிர்வாக உத்தரவின் மூலம் அதிகாரி களுக்கு அரசு வழிகாட்டு தலை வழங்க வேண்டும். அடிமனை மட்டும்தான் கடவுளுக்கு சொந்தம். அதற்குமேல் உள்ள கட்டி டம் வசிப்போருக்கு சொந்தம் என்பதை அரசு அங்கீகரிக்க வேண்டும். இனாம் நிலம் கோவிலுக்கு சொந்த மில்லாத நிலத்தை, கோவி லுக்கு சொந்தமானது என்று பக்தர் போர்வையில், பக்தர் ர்களுக்கு எதிராக ஏராள மான வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப் பிட்ட நிலத்தில் குடியிருப் போருக்கு தெரிவிக்காமல் நீதிமன்றம் ஒருதலைப்பட் சமாக தீர்ப்பளிக்கிறது. நீதிமன்ற தீர்ப்பைகாட்டி மக்களை வெளியேற்ற அதி காரிகள் முயற்சிக்கின்றனர். இதனை நீதிமன்றத்தின் கவனத்திற்கு தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்களும், கோவில் நிர்வாகங்களும் உரிய முறையில் கொண்டு சென்றிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால் ஏராளமான சட்ட ஒழுங்கு பிரச்சனை எழுகிறது. அர சுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நீதிமன்றங்கள் பலவித தீர்ப்புகளை வழங்குகின்றன. எனவே, மக்களின் வாழ்வுரிமையை பாதிக்கும் வகையில் ஆட்சியாளர்கள், நீதிமன்றங்கள் நடந்து கொள்ளக்கூடாது. ஆக்கிர மிப்பாளர்கள் என்று வெளி யேற்றுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நமது போராட்ட நிர்பந்தமும், தற்போதுள்ள ஆட்சியா ளர்களின் அணுகுமுறையும் தற்போது நமக்கு வெற்றியை தந்துள்ளது. இதற்காக தொடர்ந்து ஒன்றுபட்டு போராடுவோம். தமிழகத் தில் மீண்டும் அமையும் திமுக அரசு இவற்றை யெல்லாம் நிறைவேற்றும் என்று நம்புகிறோம். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு, சிபிஐ  மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மூத்த தலைவர்கள் இரா.முத்தர சன், ஜி.பழனிச்சாமி, துணை ச்செயலாளர் நா.பெரிய சாமி, சங்கத்தின் செயலாளர் வை.சிவபுண்ணியம் உள்ளிட்டோர் பேசினர்.