திருச்சுழி அருகே மாடியில் தூங்கிய இளைஞர் படுகொலை சிறுவன் உட்பட 4 பேர் கைது
விருதுநகர்,மார்ச் 6- விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள சாமி நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாவு என்பவர் மகன் ராஜசெல்வம் (30). இவர் பட்டுக்கோட்டையில் கூலி தொழி லாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜசெல்வம் தனது சொந்த ஊரான திருச்சுழி அருகே உள்ள சாமிநத்தம் கிராமத்திற்கு வந்துள்ளார். பழனி கோவிலுக்கு செல்வதற்காக ஊருக்கு வந்த ராஜ செல்வம் வியாழனன்று நள்ளிரவில் சாமிநத்தம் கிராமத்தில் உள்ள தனது வீட்டின் மொட்டை மாடியில் தூங்கினார். அப்போது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவி னர்கள் அளித்த தகவலின் பேரில் திருச்சுழி காவல்துறை யினர் வந்தனர். திருச்சுழி காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவத்தில் தடயங்களை சேகரித்து கொலை குற்றவாளிகளை போலீ சார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக அதே சாமிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் பொன்இருளன் (21), போஸ் மகன் இருள்குமார் (27), மதுரை வீரன் மகன் கூலு (எ) குமரவேல் (19) மற்றும் 17 வயது சிறுவனான சரவணவேலு என்பவர் மகன் காளி என்ற நாகநாத சேதுபதி (17) ஆகிய நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில் கொலை செய் யப்பட்ட ராஜசெல்வம் உள்ளிட்ட 5 பேரும் கூட்டாளிகள் எனவும், இவர்களுக்குள் ஏற்கனவே பல்வேறு முன் விரோதம் இருந்து வந்ததும் தெரியவந்தது. இதனால் திட்டமிட்டே வீட்டின் மொட்டை மாடியில் உறங்கிக் கொண்டிருந்த ராஜசெல்வத்தை வாள், அரி வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்ததாகவும், போலீசார் விசாரணை யில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து கொலைக் குற்றவாளிகள் அனைவரும் திருச்சுழி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் சிறுவனான காளி (17) மதுரை சிறுவர் கூர்நோக்கு இல்லத்திலும், மற்ற மூவரும் விருதுநகர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
சிவகாசியில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி கார்
விருதுநகர்,மார்ச் 6- விருதுநகர் மாவட்டம் சிவகாசி பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே மாரிச்செல்வம் என்பவர் அவருக்கு சொந்தமான ஆம்னி காரை கடந்த 40 நாட்களாக நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் வெள்ளியன்று காரை இயக்க முயற்சித்தபோது திடீரென கார் தீப்பற்றியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து தீயணைப்பான் கருவியை எடுத்து வந்து தீயை அணைக்க முயற்சித்துள்ளார். ஆனாலும் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் சிவகாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் துரித மாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்து தொ டர்பாக சிவகாசி நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே வெடித்துச் ்சிதறிய பட்டாசுக் ்கழிவுகள்
பல கி.மீ. தூரத்திற்கு அதிர்வு-மக்கள் அச்சம் விருதுநகர் ,மார்ச் 6- சிவகாசி அருகே பட்டாசு கழிவுகளை கொளுத்தும் போது பட்டாசுகள் பயங்கரமாக வெடித்து சிதறியதால் பல கிலோமீட்டர் தூரத்திற்கு அதிர்வு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஆனைக் குட்டம் பகுதியிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றள விற்கு வெடிச் சத்தத்துடன் கூடிய அதிர்வு காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் நடத்திய விசார ணையில் 3 பட்டாசு ஆலைகளில் வெளியான கழிவுகளை அழிப்பதற்காக தீ வைத்த போது ரசாயன கழிவுகள் மற்றும் கழிவு பட்டாசுகள் வெடித்து சிதறியது தெரிய வந்தது. விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்து நீண்ட நேரமாக பட்டாசு கழிவுகள் வெடித்து சிதறிய நிலையில் சிவகாசி தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். வழக்கமாக பள்ளம் தோண்டி அதில் கழிவு பட்டாசுகளை கொட்டி கொளுத்தாமல் விதிமுறையை மீறி சமதள பகுதியில் வைத்து பட்டாசு கழிவுகளை கொளுத்தியதே விபத்திற்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இராமநாதபுரம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் முதியோர், மாற்றுத்திறனாளிகள் அவதி
இராமநாதபுரம், மார்ச் 6- இராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் மட்டும் 60 வயதிற்கு மேற்பட்ட முதி யவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிக ளுக்கான சிகிச்சை பிரிவு செயல்பட்டு வரு கிறது. இந்த நிலையில் முதியோர்களுக் கான வெளி நோயாளி பிரிவு மருத்துவர்கள் இல்லாத நிலையில் முதியோர்களும், மாற்றுத்திறனாளிகளும் சிகிச்சை பெற முடியாமல் அவதி. இது தொடர்பாக தமிழ்நாடு அனை த்து வகைமாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத் தின் மாவட்டச் செயலாளர் எம்.ராஜ்குமார் கூறிய தாவது: இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களும் 60 வய துக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனா ளிகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு செயல்பட்டு வந்த நிலையில் தற்போது மருத்துவர் இல்லாமல் முதியோர்களையும் மாற்றுத்திறனாளிகளும் வெளி நோயாளி பொது பிரிவின் சிகிச்சை பெற வேண்டுமென கூறுவதால் முதியோர்களும் மாற்றுத்திற னாளிகளும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி மருத்துவ அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்ட தற்கு. நாங்கள் என்ன செய்ய முடியும்/ மருத்துவர்கள் இல்லை என அலட்சிய மாக பதிலளிக்கின்றனர். வரும் காலங்களில் உரிய முறையில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிக்கான தனி சிறப்பு பிரிவை மீண்டும் செயல்படுத்த வேண்டும். அலட்சி யமாக செயல்பட்ட மருத்துவ அலுவலர் மீது மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.