மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக்குழு உறுப்பினர் வி.தயானந்தம் தந்தை
எஸ்.வேலாயுதம் (81) வயது மூப்பு காரணமாக செவ்வாயன்று (டிச. 16) காலமானார். நங்கநல்லூர் தில்லை கங்கா நகர் 3ஆவது தெருவில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தர்ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் அதே பகுதியில் உள்ள இடுகாட்டில் மாலை அடக்கம் செய்யப்பட்டது.
