வி.தயானந்தன் தந்தை காலமானார்
சென்னை, டிச. 16 - அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.தயானந்தத்தின் தந்தை எஸ்.வேலாயுதம் செவ்வாயன்று (டிச.16) காலமானர். அவருக்கு வயது 81. அவரது உடல் தில்லை கங்கா நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர்கள் ஏ.பி.அன்பழகன், எம்.சந்திரன், ஆர்.துரை, வி.சசிக்குமார், ஏ.ஆர்.பாலாஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் எம்.ராமகிருஷ்ணன் (வடசென்னை), ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்தியசென்னை), மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தராஜன், சிஐடியு வடசென்னை மாவட்ட தலைவர் எஸ்.கே.மகேந்திரன், மாவட்டச் செயலாளர்கள் வி.குப்புசாமி (வடசென்னை), எஸ்.கே.முருகேஷ் (மத்தியசென்னை), ஜி.செந்தில் குமார் (தென்சென்னை) உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அவரது உடல் நங்கநல்லூர் இடுகாட்டில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
