தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தில் செய்யப்படும் மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி எம்.பிக்கள் நாடாளுமன்ற வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தில் பெயர் மாற்றம், ஒன்றிய அரசின் நிதியை குறைத்தல், நேர மாற்றம் என பல்வேறு மாற்றங்களை கொண்டுள்ள மசோதாவை இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது
இதனை எதிர்த்து தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தை ஒழித்துக்கட்டும் “விக்சித் பாரத் கிராம்ஜி” சட்ட முன்வரைவை கைவிடக்கோரி நாடாளுமன்ற வாயிலின் முன் இன்று காலை இடதுசாரி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
