headlines

img

திருவனந்தபுரம் “திருப்புமுனை” அல்ல!

திருவனந்தபுரம்  “திருப்புமுனை” அல்ல!

கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில், திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களைப் பெற்றது, பிரத மர் மோடியால் “புதிய சகாப்தத்தின் துவக்கம்” என்றும், காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர் சசி தரூரால் “வரலாற்றுச் செயல்பாடு” என்றும் முழங்கப்படுகிறது. ஆனால், இந்த வெற்றியைப் பிரமாண்டப்படுத்தும் அவர்களது கூற்றுக்கும், நிஜமான தேர்தல் தரவுகளுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் ஜான் பிரிட்டாஸ் எம்.பி. சுட்டிக்காட்டியபடி, தரவுகளை ஒப்பிடுவது இந்த “வரலாற்று” முழக்கத்தின் காற்றை ஒரு நொடியில் நீக்கிவிடும்; திருவனந்தபுரத்தில் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற மொத்த வாக்குகள் 2,13,214. 2025 உள்ளாட்சித் தேர்தலில் இது 22.1% குறைந்து 1,65,891 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இதே காலகட்டத்தில், இடது ஜனநாயக முன்னணி (LDF) பெற்ற வாக்கு கள் 1,29,048-இலிருந்து 29.8% உயர்ந்து 1,67,522 ஆக அதிகரித்துள்ளது.

திருவனந்தபுரம் தேர்தலில் மிகப் பெரிய தோல்வியை எதிர்கொண்டது காங்கிரஸ் தலை மையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) தான். அதன் வாக்குகள் 1,84,727-இலிருந்து 31.8% வீழ்ச்சியடைந்து 1,25,984 ஆகக் குறைந்தது.

வெளியே தெரிந்த வெற்றிச் செய்தியை மட்டும் வைத்து, திருவனந்தபுரத்தில் உள்ளா ட்சித் தேர்தலில் பாஜக கூடுதல் இடங்களைப்  பிடித்ததை “வரலாற்றுச் சாதனை” எனச் சசி தரூர் பாராட்டுவது, சுயபரிசோதனைக்குத்  தயாராக இல்லாத அவரது கட்சியின் தோல்வி  மனப்பான்மையையே காட்டுகிறது. தனது கோட்டை என யுடிஎப் கருதும் திருவனந்த புரத்தில் தமது வாக்குகள் 32% படுவீழ்ச்சி அடைந் ததைப் பற்றிப் பேசாமல்,அந்த இடங்களில் ஒரு பகுதி பாஜகவுக்கு போனதை வியந்து போற்றுவது என்ன அரசியல்? 

பிரதமர் மோடியின் “திருப்புமுனை” என்ற  கூற்றும் எடுபடாது. ஒரு கட்சி தனது முந்தைய வாக்குகளிலிருந்து 22% இழந்தால், அது எப்படி ஒரு “புதிய சகாப்தத்தின் துவக்கம்” ஆக  முடியும்? பாஜகவின் பலம் கூடியதால் அல்ல, பிரதான எதிர்த்தரப்பின் பலவீனம் தந்த இலவசம் இது.

திருவனந்தபுரத்தின் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், கேரளத்தில் ஒரு “திருப்புமுனை” அல்ல; மாறாக, காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப்பின் வியூகத் தோல்வியின் விளைவாக, பாஜகவால் தற்காலிகமாக அறுவடை செய் யப்பட்ட ஒரு சம்பவமே. இந்தத் தரவுகளைப் புறக் கணித்துவிட்டு, “வரலாற்றுச் சாதனை” எனப் பிரச்சாரம் செய்வது, கேரள அரசியலின் உண் மையான காட்சியைக் குலைக்கும் முயற்சி ஆகும். இந்த மாய வலைக்குப் பலியாகாமல், இடதுசாரி ஜனநாயக சக்திகள் யுடிஎப்பின் வீழ்ச்சியை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்திக் கொள்வதே காலத்தின் தேவை. அதை நிச்சயம் அவர்கள் செய்வார்கள்.