உலகளாவிய சமத்துவமின்மை மோசமான அரசியலின் விளைவு
உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 முன்வைத்துள்ள அதிர்ச்சியூட்டும் உண்மை கள், உலக முதலாளித்துவ அமைப்பு எந்த அள விற்குச் சீரழிந்துள்ளது என்பதற்கான சான்றுக ளாக உள்ளன. உலக மக்கள் தொகையில் 10 விழுக்காடு உள்ளவர்கள் மீதமுள்ள 90 விழுக் காட்டினரின் ஒட்டுமொத்த வருமானத்தை விட அதிகமாக ஈட்டுகின்றனர். இன்னும் கொடுமை என்னவென்றால், ஒரு மைதானத்தில் அடக் கக்கூடிய வெறும் 60,000க்கும் குறைவான தனி நபர்கள், உலகின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையான 4.1 பில்லியன் பேரின் மொத்தச் செல்வத்தை விட மூன்று மடங்கு செல்வத் தைக் கட்டுப்படுத்துகின்றனர்.
இந்த அதீதச் செல்வக் குவிப்பு என்பது ‘திற மையான சந்தை’யின் விளைவு அல்ல; இதன் பின்னணியில் ஆளும் வர்க்கங்களின் அரசியல் உள்பட பல்வேறு காரணிகள் உள்ளன. உலகளா விய அளவில், காலநிலை மாற்றத்தின் சுமை கூட ஏழைகள் மீதே ஏற்றப்படுகிறது. கார்பன் உமிழ் வில் பெரும் பங்கு வகிப்பது, தனியார் மூலதனத்தை வைத்திருக்கும் 10 விழுக்காடு பணக்காரர்கள்தான். அவர்கள் தான் 77 விழுக்காடு உமிழ்வுக்குக்காரணம்.
இந்த அநீதியில் இந்தியாவும் மிக மோச மான நிலையில் உள்ளது. இந்தியா உலகிலேயே அதிக சமத்துவமின்மை நிலவும் நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. நாட்டின் மொத்தச் செல் வத்தில் சுமார் 65விழுக்காடு மொத்த மக்கள் தொ கையில் 10 விழுக்காடு உள்ள செல்வந்தர்களின் கைகளில் குவிந்துள்ளது; 1 விழுக்காட்டினர் மட்டும் மொத்தச் செல்வத்தில் 40 விழுக்காட்டை கொண்டுள்ளனர். அமைப்புசார்ந்த இந்தச் சுரண்டல், ஏழைகள் மேலும் ஏழைகளாகும் நிலைக்குத் தள்ளுகிறது.
சமத்துவமின்மை பொருளாதாரம் மட்டு மின்றி, பாலினத்தின் மீதும் கடுமையாகச் சுமத்தப் படுகிறது. பெண்கள் ஊதியமின்றி வீட்டு வேலை களை அதிகம் செய்வதால், சம்பளத்துடன் கூடிய வேலையில் ஆண்கள் சம்பாதிப்பதை விட மிகக் குறைவாகவே சம்பாதிக்கின்றனர்.
சமத்துவமின்மை நீடிப்பதற்கு பணக்காரர்க ளை இலக்காகக் கொண்ட வரி விதிப்பு முறை இல்லாததும் ஒரு காரணமாகும். மிகப்பெரிய செல்வந்தர்கள் சாதாரண மக்களை விட மிகக் குறைந்த வரியே செலுத்துகின்றனர். இது கல்வி, சுகாதாரம் மற்றும் காலநிலை நடவடிக்கைக் கான பொது நிதிக்கு போதாது. செல்வந்தர்களிட மிருந்து நியாயமான முறையில் வரியைப் பெற வேண்டும். உதாரணமாக, உலகில் உள்ள பில்லி யனர்கள் மீது 3 விழுக்காடு உலகளாவிய வரி விதித்தால் கூட, ஏழை நாடுகளின் கல்வி வரவு செலவுத் திட்டத்திற்கு இணையான 750 பில்லி யன் டாலர்களை ஈட்ட முடியும்.
இந்த நிதியை மறுவிநியோகம் செய்வதன் மூலமும், பொதுநலத் திட்டங்களுக்கு முன்னு ரிமை அளிப்பதன் மூலமும் மட்டுமே நாம் அனை வருக்குமான சமத்துவ உலகத்தைக் கட்டி யெழுப்ப முடியும். சமத்துவமின்மை என்பது விதி யல்ல; இது நாம் தேர்ந்தெடுத்த அரசியலின் வடிவம்.
