states

img

மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜினாமா!

கொல்கத்தாவில், புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட வன்முறைக்கு பொறுப்பேற்று, மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கால்பந்து உலகின் நட்சத்திர வீரரும், அர்ஜெண்டினா அணியின் கேப்டனுமான லியோனல் மெஸ்ஸி, கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி இந்தியாவிற்கு வருகை தந்தார். கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் அவரை காண்பதற்காக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை டிக்கெட்டுகள் பெற்று ரசிகர்கள் மைதானத்தில் காத்திருந்தனர். மெஸ்ஸி மைதானத்திற்குள் நுழைந்த உடனேயே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் மற்றும் கால்பந்து கிளப் பிரதிநிதிகள் உட்பட 80க்கும் மேற்பட்டோர் அவரை சூழந்துகொண்டது.
மெஸ்ஸியை காண முடியாத காரணத்தால், கோபமடைந்த ரசிகர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதை தொடர்ந்து, மெஸ்ஸி உடனடியாக மைதானத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். இதனை தொடர்ந்து மைதானத்தில் உள்ள நாற்காலிகளை உடைத்து வீசியும், பொருட்களுக்கு தீயிட்டும் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கொல்கத்தா காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த சூழலில், வன்முறைக்கு பொறுப்பேற்று, மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.