states

img

மம்தா தொகுதியில் அதிக வாக்காளர்கள் நீக்கம்

மம்தா தொகுதியில் அதிக வாக்காளர்கள் நீக்கம்

மேற்கு வங்க மாநிலத்தில் வாக்கா ளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு செவ்வாயன்று வரைவு வாக்காளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியானது. இதில் 56 லட்சம் வாக்கா ளர்கள் நீக்கப்பட்டுள் ளனர்.  பொதுமக்கள் தங்கள் விபரங்களை இணையதளம் வாயி லாகச் சரிபார்த்துக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளதுடன், ஆட்சேபணை கள் இருந்தால் பிப்ரவரி மாதம் வரை  தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணை யம் அறிவித்துள்ளது.  இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி யின் பவானிபூர் தொகுதியில் எதிர்க் கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியை விட அதிகளவி லான பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா வடக்கு சவுரங்கி தொகுதியில் அதிகபட்ச நீக்கம் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் நிலையில், வரைவுப் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டிருந்தாலும்  முறையான விசாரணைக்குப் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் மழுப்பலாகக் கூறியுள்ளனர்.