states

img

கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்ற விவசாயி

கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்ற விவசாயி

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே நாக்பிட் தாலுகாவில் உள்ளது மின்தூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ரோஷன் சதாசிவ் குடேவுக்கு 4 ஏக்கர் நிலம் உள்ளது. தொடர் மழையால் விவ சாயம் பொய்த்து போக, ரோஷன் பால்  தொழிலில் இறங்கியுள்ளார். கறவை மாடு கள் வாங்க இரண்டு நபர்களிடம் தலா ரூ.50,000 வீதம், ரூ.1 லட்சம் வட்டிக்கு வாங்கியுள்ளார். எதிர்பார்த்த அளவு வருமானம் கிடைக்காததால், ரோஷ னால் வட்டி கூட கட்ட முடியவில்லை. ஒரு  லட்சம் ரூபாய், 74 லட்சமாக உயர்ந்தது.  இதனால் கடனுக்கு வட்டி கட்ட ரோஷன் தனது 2 ஏக்கர் நிலத்தை விற்றார். தொடர்ந்து டிராக்டரையும், வீட்டுப் உபயோக பொருட்களையும் விற்றார். இது வட்டிக்கு மட்டுமே சரியாகிப் போனது. இதனால் கடனை அடைக்க ரோஷன் தனது சிறுநீரகத்தை விற்றுள்ளார். புரோக்கர் ஒருவர் ரோஷனை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு அழை த்துச் சென்றார். சட்டவிரோத மருத்துவ பரிசோதனைக்குப் பின்பு ரோஷன் கம்போடியா நாட்டில் அறுவை சிகிச்சை செய்து சிறுநீரகத்தை விற்றுள்ளார். அதாவது ரோஷன் சிறுநீரகத்தை ரூ. 8 லட்சத்திற்கு விற்றுள்ளார்.  எதிர்க்கட்சிகள் கண்டனம் மகாராஷ்டிராவில் விவசாயிகள் கடும் மழை, கட்டுப்பாடற்ற வெயில் காரண மாக கடும் இன்னலுக்கு ஆளாகி வரு கின்றனர். ஒரு போகம் கூட முழுமை யாக விளையவில்லை. ஒன்றிய மற்றும் மாநில பாஜக அரசுகள் உரிய நிவார ணமும் வழங்கவில்லை. இதனால் கடந்த 9 மாதங்களில் மகாராஷ்டிரா முழுவதும் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயி ரிழந்தனர். உயிரோடு இருக்கும் விவ சாயிகள் ரோஷன் போன்று சிறுநீர கத்தை விற்று நாட்களை கழித்து வரு கின்றனர் என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.