states

img

கேரளாவில் அம்பலமான காங்கிரஸ் - பாஜக கள்ளக் கூட்டணி

கேரளாவில் அம்பலமான  காங்கிரஸ் - பாஜக கள்ளக் கூட்டணி

கேரளாவில் முதல்முறையாக ஒரு மாநகராட்சியில் பாஜக மிகப்பெரிய ஒற்றைக் கட்சியாக உருவெடுத்துள் ளது. காங்கிரஸ் கட்சியின் கைங்கரியத்தா லேயே பாஜகவுக்கு இந்த வெற்றி சாத்திய மாகியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல்களின் போது ஏற்பட்டதாகக் கூறப்படும் மறைமுகப் புரிதல்கள் மாநிலத்தின் பல பகுதிகளில் காணப்பட்டாலும், திருவனந்தபுரம் மாநகராட்சியில் அவை மிகவும் வெளிப்படையாகத் தெரிந்தன. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இடது முன்னணி திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக வென்ற 41 வார்டுகளில் காங்கிரஸ் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. காஞ்சிராம்பாறை (39 வாக்குகள்), பொன்னுமங்கலம் (14), ஆட்டுக் கல் (11), சாலா (12), குழிவிளை (55) ஆகிய 5 வார்டுகளில் இடது முன்னணி 60 வாக்குகளுக் கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. குறிப்பாக பாஜக வென்ற 25 வார்டுகளில், காங்கிரஸ் மிகக் குறைவான வாக்குகளைப் பெற்ற அத்திப்ரா (370), கருமம் (525), கோட்டை (225) மற்றும் நெடுங்காடு (395) ஆகிய நான்கு வார்டுகள் உட்பட 1,000க்கும் குறைவான வாக்குகளையே பெற்றது. ஒவ்வொரு வார்டுகளிலும் சராசரியாக 4,000 முதல் 6,000 வாக்குகள் பதிவான நிலையில், பல வார்டுகளில் காங்கிரஸ் கட்சியால் 1,000 வாக்கு களைக் கூட தாண்ட முடியாமல் போனது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு முந்தைய 100 உறுப்பினர்களைக் கொண்ட திரு வனந்தபுரம் மாநகராட்சி மன்றத்தில் பாஜவுக்கு 35 உறுப்பினர்களும், காங்கிரஸுக்கு 10 உறுப்பி னர்களும், இடது முன்னணிக்கு 53 உறுப்பினர்க ளும் இருந்தனர்.  காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு வெற்றிகரமாக உதவி செய்யாமல் இருந்தி ருந்தால், மாநகராட்சி மன்றத்தில் மிகப்பெரிய ஒற்றைக்கட்சியாக மீண்டும் உருவெடுத்தி ருக்கும் என்று இடது முன்னணி வாதிடுகிறது. இடது முன்னணியின் கூற்றுப்படி, பாஜக  மற்றும் யுடிஎப் (காங்கிரஸ்)  ஆகிய இருகட்சி களின் ஒரே நோக்கம் மாநகராட்சியிலிருந்து இடதுசாரிகளை அகற்றுவதே ஆகும். சில வார்டு களில் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு உதவியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  முட்டடா பிரிவில் பாஜக வேட்பாளர் 460 வாக்குகளையும், குன்னுகுழியில் 394 வாக்குக ளையும் பெற்றார். பல வார்டுகளில் வாக்குகள் மாறிய போதிலும், 2020இல் வெறும் 10 வார்டு களுக்குள் சுருங்கியிருந்த காங்கிரஸ் கட்சியால், இம்முறை பாஜக தனிப்பெரும்பான்மை பெறுவதைக் கூட தடுக்கமுடியவில்லை. திரு வனந்தபுரம் மட்டுமல்லாமல் கொல்லம், கோட்டயம், இடுக்கி, ஆலப்புழா, பத்தனம் திட்டா மற்றும் கண்ணூர் போன்ற மாவட்டங்க ளிலும் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே பரஸ்பர ஆதரவு  மறைமுகமாக இருந்ததாகக் கூறப்படும் இதுபோன்ற சம்பவங்களும் பதி வாகியுள்ளன. தேசாபிமானி - (15.12.2025) தமிழில் : ப.தெட்சிணாமூர்த்தி