சந்தர்ப்பவாத நிலைப்பாட்டை எல்டிஎப் ஏற்றுக்கொள்ளாது ஒருங்கிணைப்பாளர் டி.பி.ராமகிருஷ்ணன் உறுதி
தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகளை தீர்மானிப்பதில் இடது ஜன நாயக முன்னணி (எல்டிஎப்) எந்த வகை யான சந்தர்ப்பவாத நிலைப்பாட்டையும் ஏற்றுக்கொள்ளாது என எல்டிஎப் ஒருங்கிணைப்பாளர் டி.பி.ராம கிருஷ்ணன் தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் செவ்வாயன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில், “உள்ளாட்சித் தேர்தல்கள் எல்டிஎப் மீண்டும் ஆட்சிக்கு வருவதை முற்றிலுமாக மறுக்கும் ஒரு ஆணையல்ல. எல்டிஎப் அரசாங்கம் கடந்த 9 ஆண்டுகளாக கேரளாவின் பொது மேம்பாடு மற்றும் நலனில் அசாதாரண அணுகுமுறையை எடுத்து வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மிகுந்த நிதானத்துடன் ஆரா யப்படும். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எல்டிஎப் மூன்றாவது முறை யாக ஆட்சியில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை . கேரள உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பை விரிவாகவும் ஆழமாகவும் ஆய்வு செய்து தேவை யான திருத்தங்கள் செய்யப்படும். உள்ளாட்சித் தேர்தல்களில் மக்களின் தீர்ப்பை மதித்து, எதிர்கால நடவ டிக்கைகளை வடிவமைப்பதன் மூலம் இடதுசாரிகள் முன்னேறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தல்களில் எல்டிஎப் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடிய வில்லை. மக்களின் தீர்ப்பு விரிவாகவும் ஆழமாகவும் ஆராயப்படும். இடது முன்னணியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அந்த வகையில் ஒரு ஆய்வை நடத்தும். அந்தந்த கட்சிகளில் விவாதத்திற்குப் பிறகு, ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் எல்டிஎப் கூட்டத்தில் விரிவான விவாதம் நடத்தப்படும்” என அவர் கூறினார்.
