லடாக் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் விடுதலை
இமயமலைச் சாரலில் உள்ள லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்புப் பாது காப்பு கோரி போராட்டம் நடத்தி வந்த பிரபல கல்வி, சூழலியல் ஆர்வலர் சோனம் வாங்சுக் 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி கைது செய் யப்பட்டார். லடாக் பகுதியில் மாநில அந்தஸ்து கோரி நடந்த போராட்டங்கள் (செப்டம்பர் 2025) வன்முறையாக மாறியதில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறையைத் தூண்டியதாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், ஐந்து மாதங்களுக் கும் மேலாக சிறையில் இருக்கும் சோனம் வாங்சுக்கை விடுதலை செய்வதாக ஒன்றிய மோடி அரசு சனியன்று காலை அறிவித்தது. இதுதொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“லடாக்கில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பரஸ்பர நம்பிக் கையை வளர்ப்பதற்காகவும், அங்குள்ள மக்களுடன் ஆக்கப்பூர்வமான பேச்சு வார்த்தையை முன்னெடுப்பதற்காகவும் சோனம் வாங்சுக் விடுதலை செய்யப்படு கிறார்” என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை தொடர்ந்து ராஜஸ்தா னின் ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக் கப்பட்டிருந்த சோனம் வாங்சுக் சனி யன்று மதியம் 1:30 மணியளவில் விடு விக்கப்பட்டார். உச்சநீதிமன்றம் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி அங்மோ, தனது கணவரின் கைது சட்டவிரோதமானது என்று கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தி ருந்தார். சமீபத்திய விசாரணையின் போது, வாங்சுக்கின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்த நீதிபதிகள், அவரது தடுப்புக்காவலை மறுபரிசீலனை செய்யு மாறு அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும் இந்த வழக்கின் தீர்ப்பு மார்ச் 17ஆம் தேதி வரவிருந்த நிலையில், அதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே மோடி அரசு சோனம் வாங்சுக்கை விடுவித்துள்ளது. வரவேற்பு வாங்சுக்கின் விடுதலையை லடாக் மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் அமைப்புகள் வரவேற்றுள்ளன. “இது லடாக் மக்களுக்குக் கிடைத்த வெற்றி” என்று லடாக் பவுத்த சங்கம் தெரி வித்துள்ளது. அதேசமயம், லடாக்கிற் கான 6ஆவது அட்டவணை பாதுகாப்பு மற்றும் இதர உரிமைகளுக்கான தங்களின் போராட்டம் ஜனநாயக முறை யில் தொடரும் என்றும் லடாக் மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் அமைப்பு கள் கூறியுள்ளன.
