headlines

img

நிதிஷ்குமாரின் நீசச்செயல்

நிதிஷ்குமாரின் நீசச்செயல்!

உனது நண்பன் யாரென்று சொல், உன்னை யார் என்று புரிந்து கொள்கிறேன் என்பார்கள். சக வாச தோசத்தினால் அவர்களது பழக்கம் இவர்க ளுக்கும் வந்துவிடும் என்பதற்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மிகச் சரியான  மோசமான சான்றாகத் திகழ்கிறார்.

முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டும் என்ற ஒற்றை இலட்சியத்துக்காகவே அணி மாறு வதில் சளைக்காத, அதில் சாதனையும் படைத்த  நிதிஷ்குமாரை அடித்துக் கொள்ள இந்தியா வில் வேறு ஆளே இல்லை. சோசலிஸ்ட் என்றும் ஜெயப் பிரகாஷ் நாராயணன், நரேந்திர தேவ் ஆகியோரின் சீடர் என்றும் கூறிக்கொள்ளும் அவர் முதல்வர் பதவிக்காக மதவெறி பாஜக வின் அடிப்பொடியாகவே மாறிப் போனார். அதற்குப் பலனாக முதல்வராகவும் பொறுப்பேற் றுள்ளார். அதனால் இந்த பிறவி பயனை அடைந்தது என்று நினைத்து பாஜகவினரைப் போல அல்ல, அவர்களையே மிஞ்சும் வண்ணம் நடந்து கொண்டிருக்கிறார். 

தலைநகர் பாட்னாவில் திங்களன்று நடந்த பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 10 பேரில் ஒருவர் பெண் மருத்து வர் நுஸ்ரத் பர்வீன். அந்த இஸ்லாமியப் பெண்ணின் ஹிஜாப்பை பிடித்து இழுத்த முதல்வர் நிதிஷ்குமார், இது என்ன? என்று கேள்வியையும் எழுப்பியதால் அந்த பெண் மருத்துவர் அதிர்ச்சியடைந்தார். மேடையில் இருந்த பாஜகவைச் சேர்ந்த துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரியே சங்கடமாய் உணர்ந்தார் என்று செய்தி ஊடகங்கள் கூறியுள்ளன.

முதல்வர் நிதிஷ்குமாரின் இந்த கண்ணிய மற்ற செயல் சமூக ஊடகங்களில் பரவி கடும் சர்ச்சையையும் கண்டனத்தையும் ஏற்படுத்திள் ளது. மாநில எதிர்க்கட்சிகளான ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்ட னத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளன. நிதிஷ்குமாரின் நிலையற்ற மனப்போக்கிற்கு சமீபத்திய உதாரணம் இச்சம்பவம் என்று விமர்சித் துள்ளன. தொடர்ந்து அவருக்கு நாடு முழுவ தும் பரவலாக கண்டனங்கள் எழுந்துள்ளன.

மதச்சார்பற்ற தன்மை கொண்டதாக கூறிக் கொள்ளும் ஐக்கிய தள கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரும் மூத்த அரசியல்வாதி களில் ஒருவருமான நிதிஷ்குமார் முதல்வர் பதவிக்குரிய கண்ணியத்தை காற்றில் பறக்க விட்டு இத்தகைய செயலில் ஈடுபட்டால் அங்குள்ள இஸ்லாமிய வெறுப்பு அரசியல் நடத்தும் அவரது கூட்டணிக் கட்சியும் எஜமான கட்சியுமான பாஜகவினரும் அதன் பரிவார அமைப்பினரும் எப்படி நடந்து கொள்ளு வார்கள்?

முதல்வர் எவ்வழி, முஸ்லிம் வெறுப்பு கொண்ட பாஜக - பரிவாரத்தினர் அவ்வழி என்று நடக்கத்துவங்கினால் அம்மாநிலத்தில் உள்ள முஸ்லிம் மதச் சிறுபான்மையினரின் பாதுகாப்பு என்னவாகும்? இப்போது உள்துறை பொறுப்பும் கூட பாஜக துணை முதல்வரிடமே இருக்கும் நிலையில் நினைக்கவே அச்சமாக உள்ளது முஸ்லிம் பெண்களின் எதிர்காலப் பாதுகாப்பு!