states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் எம்.பி., ஜான் பிரிட்டாஸ்

100 நாள் வேலைத் திட்டத்தை கைவிடுவதே ஒன்றிய பாஜக அரசின் முக்கிய நோக்கம் ஆகும். ராமரை வைத்து மகாத்மா காந்தியை மீண்டும் படுகொலை செய்வது வெட்கக்கேடானது. 100 நாள் திட்டத்தின் புதிய மசோதாவால் ரூ.50,000 கோடி அனைத்து மாநிலங்கள் மீதும் சுமத்தப்படுகிறது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

மோடிக்கு இரண்டு விஷயங்கள் மீது அதீத வெறுப்பு உள்ளது. ஒன்று மகாத்மா காந்தியின் கொள்கைகள், மற்றொன்று ஏழைகளின் உரிமைகள். கடந்த 10 ஆண்டுகளாக மோடி அரசு மகாத்மா காந்தி ஊரக திட்டத்தை  திட்டமிட்டு பலவீனப்படுத்த முயன்று வருகிறது. இப்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறது.

சமாஜ்வாதி எம்.பி., இக்ரா ஹசன்

ஒரு பெண் மருத்துவரின் ஹிஜாப்பை இழுப்பது என்பது நிதிஷ் குமாரின் சுயமரியாதை மற்றும் மத அடையாளம் மீதான நேரடி தாக்குதல். ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே இத்தகைய அவமதிப்பை செய்யும் போது, அந்த மாநிலத்தின் பெண்களுக்கான பாதுகாப்பு பெரும் கேள்விக்குறிதான். 

தமிழ்நாடு கிரிக்கெட் வீராங்கனை கமலினி

இந்திய அணியில் தேர்வானதில் மிகுந்த மகிழ்ச்சி. எனக்காக எனது பெற்றோர் அனைவரும் கஷ்டப்பட்டு உள்ளனர். வருங்காலங்களில் கிரிக்கெட்டில் வர வேண்டும் என கனவோடு இருக்கும் பலருக்கும் உத்வேகம் அளிக்க, கடின உழைப்பை கண்டிப்பாக செலுத்துவேன்.