உ.பி.,யில் கோர விபத்து 13 பேர் பலி
வடமாநிலங்களில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர். இருப்பினும் சில சமயங்களில் விபத்துகளும் நடைபெறுகின்றன. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் 7 பேருந்து கள் மற்றும் 3 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. அடர்ந்த மூடுபனி காரணமாக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி தீப்பிடித்து எரிந்தன. தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்தில் தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 13 பேர் தீயில் கருகி மோதல் விபத்தில் சிக்கி உயிரி ழந்தனர். மேலும் 35 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் அருகி லிருந்த மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
