புதுச்சேரியில் பெட்ரோலுக்கு 2.44%மும், டீசலுக்கு 2.57%மும் மதிப்பு கூட்டு வரி (வாட்) உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, புதுச்சேரியில் பெட்ரோல் மீதான வாட் 14.55%-லிருந்து 16.98%ஆகவும், காரைக்காலில் 14.55%லிருந்து 16.99%ஆகவும், மாஹேவில் 13.32%லிருந்து 15.79%ஆகவும், ஏனாமில் 15.26%லிருந்து 17.69%ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், டீசல் மீதான வாட் புதுச்சேரியில் 8.65%லிருந்து 11.22%ஆகவும், காரைக்காலில் 8.65%லிருந்து, 11.23%ஆகவும், மாஹேவில் 6.91%லிருந்து 9.52%ஆகவும், ஏனாமில் 8.91%லிருந்து 11.48%ஆகவும் அதிகாரிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு காணப்பட்டு. இந்த விலை உயர்வு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.