tamilnadu

img

காவிச் சாயம் பூச நினைப்போரை வள்ளுவம் விரட்டியடிக்கும்!

நாகர்கோவில், டிச. 31- திருக்குறளானது, காவிச் சாயம் பூச  நினைக்கும் தீய எண்ணங்களை விரட்டி யடிக்கும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். முக்கடல் சூழும்  குமரி முனையில் டிசம்பர் 31 செவ்வாயன்று  அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நடை பெற்றன. இதில் திருக்குறள் ஓலைச்சுவ டிகள், புத்தகங்கள், மின்நூல்கள் மற்றும் திருவள்ளுவர் சிலை பற்றிய புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து, அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளி  விழா சிறப்பு மலரை முதல்வர் வெளி யிட்டார். மேலும், திருவள்ளுவர் திருவுரு வச்சிலை வெள்ளி விழா வளைவிற்கு அடிக்கல் நாட்டி, திருக்குறள் சார்ந்த போட்டி களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் களுக்கு பரிசுத் தொகை வழங்கி சிறப்பித்தார்.

பண்பாட்டுக் குறியீடாக  வள்ளுவர் சிலை

பின்னர் முதல்வர் பேசுகையில், “தமிழ் நெறியின் அடையாளமாக, சுனாமியையும் எதிர்த்து உயர்ந்து நிற்கின்ற இந்த வள்ளுவர் சிலைதான், நம்முடைய அடையாளத்தின் பண்பாட்டுக் குறியீடு” என்று குறிப்பிட்டார். சமத்துவத்தை சொல்வதால் தான், தந்தை பெரியார், “நம் மதம், குறள் மதம்! நம் நெறி, குறள் நெறி!” என்று சொன்னதையும், பேரறிஞர் அண்ணா, ‘குறள் என்பது வகுப்பறையில் மட்டுமல்லாமல், உங்கள் இல்லங் களில், உள்ளங்களில் பரவ வேண்டும்’ என்று கூறியதையும் நினைவுகூர்ந்தார். கலைஞரின் குறட்பணி முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து பேசிய முதல்வர், அவர் திருக்குறள் தலைவராகவே வாழ்ந்த தாகக் குறிப்பிட்டார். பள்ளி மாண வராக இருந்தபோதே ‘நட்பு’ குறித்த பேச்சுப்போட்டியில் திருக்குறளை மேற்கோள் காட்டியதில் தொடங்கி, வாழ்நாள் முழுவதும் வள்ளுவத்தைப் போற்றும் தொண்டு செய்ததாக நினைவுகூர்ந்தார். சட்டமன்றத்தில் வள்ளுவர் படம் திறப்பு, பேருந்து களில் திருக்குறள், அரசு விடுதி களில் திருவள்ளுவர் படம், காவலர் பதக்கத்தில் வள்ளுவர், திருவள்ளு வர் ஆண்டு அறிவிப்பு, மயிலாப்பூர் நினைவாலயம், சென்னை வள்ளு வர் கோட்டம் என பல்வேறு முயற்சி களை மேற்கொண்டதாக விளக்கி னார். சிலையின் சிறப்பு 1975ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று அமைச்சரவையில் முதன்முதலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 1990-இல் தொடங்கி, 1997-இல் துரிதமாக பணிகள் நடந்து உருவான இச்சிலை குறித்தும் முதல்வர் விளக்கினார். சிற்பக் கலைஞர் கணபதி ஸ்தபதி வடிவமைத்த இச்சிலை 7000 டன் எடை கொண்டது. 3,681 கற்களால் ஆன 133 அடி உயர சிலையை 180 அடி உயர சாரம் கட்டி, 500 சிற்பிகள் உருவாக்கியதாக தெரிவித்தார்.

புதிய அறிவிப்புகள்

இந்நிகழ்வில் முதல்வர் பல்வேறு  அறிவிப்புகளையும் வெளியிட்டார்: - திருக்குறள் சிந்தனைகளை பரப்ப, திருக்குறளில் ஆர்வமும், புலமையும் மிக்க ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பயிற்சி வழங்கி மாவட்டந் தோறும் தொடர் பயிலரங்கு கள், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.  - மூன்று புதிய பயணிகள் படகுகள் வாங்கப்பட்டு, முறையே காமராசர், மார்சல் நேசமணி, ஜி.யு.போப் பெயர்களில் இயக்கப்படும். - ஆண்டுக்கு 133 உயர்கல்வி நிறுவனங்களில் திருக்குறள் தொடர் பான போட்டிகள் நடத்தப்படும். - ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் கடைசி வாரம் ‘குறள் வாரம்’ கொண்டாடப்படும். - கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். “திருவள்ளுவர் வெறும் சிலை யல்ல; திருக்குறள் வெறும் நூல் அல்ல; நம்முடைய வாழ்க்கைக்கான வாளும், கேடயமும்! அது நம்மைக் காக்கும், நம்மை அழிக்க வரும் தீமைகளை தடுக்கும். காவிச் சாயம் பூச நினைக்கிற தீய எண்ணங்களை யும் விரட்டியடிக்கும்” என்று முதல்வர் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் முன்னதாக கவிஞர்  வைரமுத்து, பொன்னம்பல அடி களார் பங்கேற்று பேசிய கருத்த ரங்கமும், திங்களன்று மாலையில் சொல்வேந்தர் சுகிசிவம் தலைமை யிலான பட்டிமன்றமும் நடைபெற்றது.