tamilnadu

img

கோவையில் கேஸ் டேங்கர் லாரி விபத்து - பள்ளிகளுக்கு விடுமுறை!

கோவை,ஜனவரி.03-  உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் கேஸ் டேங்கர் லாரி இன்று அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கொச்சினிலிருந்து சுமார் 18 டன் எரிவாயு லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று,  கோவை கணபதி நோக்கி வந்துள்ளது. அப்போது எரிவாயு டேங்கர் லாரி அவிநாசி சாலை உப்பிலிபாளையம்  மேம்பாலத்தில் வந்தபோது திடீரென,  லாரியுடன் டேங்கர்க்கு இருந்த இணைப்பு துண்டிக்கப்பட்டு,  எரிவாயு டேங்கர் மட்டும் சாலையில் கவிழ்ந்தது.  
விபத்து பகுதியில் கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 500 மீ தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.