tamilnadu

img

புதிய பாதை பிறக்கட்டும்; சமத்துவ சமூகம் மலரட்டும்!

சென்னை, டிச. 31 - 2025 ஆங்கிலப் புத்தாண்டில் புதிய பாதை பிறக்கட்டும்; சமத்துவச் சமூகம் மலரட்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு: பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், சமூக பாரபட்சங்களும் இல்லாத ஒரு புதிய சமத்துவ சமூகம் மலர்வதற்கான ஒரு புதிய பாதையை அமைக்கவும் அதற்கு எதிரான அனைத்து தடைகளை தகர்க்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த புத்தாண்டில் சபதம் ஏற்போம். சாதி, மத மோதலற்ற  சமூகத்திற்கு பாடுபடுவோம்! இருள் போல சூழும் சாதிய, மத மோதல்கள், பிற்போக்குத்தனமான பாலின பாகுபாடு, மூடநம்பிக்கைகள், சீரழி யும் முதலாளித்துவத்தின் வெளிப்பாடான ஊழல் மற்றும் பெரும் கொள்ளை உள்ளிட்ட அனைத்து கேடுகளிலிருந்தும் சமூ கத்தை விடுவித்து, மானுடம் போற்றும் உயர்வானதொரு சமூகத்தைக் கட்டி  எழுப்புவதற்கான சமரசமற்ற போராட்டங் களை அரசியல், சமூக- பொருளா தார தளங்களில் நடத்திக் கொண்டி ருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  (மார்க்சிஸ்ட்) இத்தகைய முயற்சிகளை புத்தாண்டிலும் வரும் காலங்களிலும் மேலும் முனைப்போடு தொடரும்.

பன்மைத்துவம் பாதுகாக்கும் போராட்டத்தை வலுப்படுத்துவோம்

கார்ப்பரேட் இந்துத்துவா கொள்கை களை அமலாக்கி, மக்களைப் பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், கூட்டாட்சி மற்றும் மதச்சார்பின்மை உள்ளிட்ட விழு மியங்களை சிதைக்கும் எதேச்சதிகார ஆட்சியையும் தோற்கடித்து நமது நாட்டின் பன்மைத்துவத்தைப் பாது காக்கும் போராட்டத்தை வலுப்படுத்து வோம் எனும் அறைகூவலை முன்வைப்ப தோடு, அத்தகைய போராட்டத்தில் இணைந்திருக்கும் தொழிலாளர்கள், உழைப்பாளி மக்கள், விவசாயிகள், விவ சாயத் தொழிலாளர்கள், முற்போக்கா ளர்கள், அறிவுத்துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தமது வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.