பெரம்பலூர், ஆக.14- பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுட னான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சி யர் வே.சாந்தா முன்னிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழுவின் தலைவர் சு.ராஜேந்திரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியரகத்தில் நடை பெற்றது. இதில் குழுவின் உறுப்பினர்கள் பா.ஆறுமுகம், சக்கரபாணி, கே.எஸ்.விஜயகுமார், க.அன்பழ கன், துரை.சந்திரசேகரன், உ.தனி யரசு, பி.முருகன் மற்றும் குழு செய லாளர் சீனிவாசன் ஆகியோருடன் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன், குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி. இராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங் கள் குறித்தும், அதன் செயல்பாடு கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து பெரம்ப லூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப் பட்டு வரும் பணிகளை பார்வை யிட்டனர். பின்னர் 2013-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி பி.ரமேஷ் குரும்பலூர் பாரதிதாசன் உறுப்புக் கல்லூரியின் மாணவ, மாணவியரின் வசதிக் காக பெரம்பலூர்-களரம்பட்டி வழித்தடத்தில் ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு வருவ தாகவும் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்திருந்தார். ஆனால் சில மாதங்களில் ஒரு பேருந்து கூட இயங்காமல் நின்று விட்டது. தற்போது அந்த மனுவிற்கு பதி லளித்த மனுக்கள் குழுவினர் அர சின் நிதி நிலைமை கருதி கூடுதல் பேருந்து இயக்க முடியாது. நிறுத்தப்பட்ட வழித்தட பேருந்து உடனே இயக்கப்படும் என்றார். 2013 ஆம் ஆண்டின் கோரிக்கை மனுவிற்கு 2019 ஆண்டு தீர்வு கண்டு கண்துடைப்பு செய்துள்ளனர். மேலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் கல்பாடி முதல் நெடுவாசல் வரை நபார்டு திட் டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 2.56 கி.மீ நீளமுள்ள சாலை பணி கள் நிறைவுற்று மக்களின் பயன் பாடு குறித்தும் இக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.