ஒடிசாவில் ஒற்றை காட்டு யானைத் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள சந்தா என்னும் கிராமத்திற்குள் இரவில் காட்டு யானை ஒன்று புகுந்தது. வீடு ஒன்றின் முற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை அந்த யானை மிதித்து தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த இருவர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் அந்த யானையை காட்டுக்குள் விரட்டியடித்தனர்.
ஒரே நாளில் அடுத்தடுத்து 5 பேரை யானை மிதித்துக் கொன்ற சம்பவம்,ஒடிசாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.