பொது இடங்களில் மக்கள் தங்கள் செல்போனை சார்ஜ் செய்ய வேண்டாம் என்று ஒடிசா காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொது இடங்களில் உள்ள செல்போன் சார்ஜிங் நிலையம், யூ.எஸ்.பி பவர் ஸ்டேஷன் போன்றவற்றில் மக்கள் தங்கள் செல்போனை சார்ஜ் செய்ய வேண்டாம் என்று ஒடிசா போலீசார் எச்சரித்துள்ளனர். சைபர் மோசடியில் ஈடுபடுபவர்கள் மக்கள் போனில் இருந்து அவர்களின் தனிப்பட்ட தகவல்களை திருட முயற்சிக்கலாம் எனவும், யூ.எஸ்.பி சார்ஜிங் கனெக்டர்கள் மூலம் ஹேக்கர்கள் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் மால்வேரைகளை புகுத்த முடியும் என்றும், இதனால் மொபைலில் உள்ள தரவுகள் திருடப்படுவது மட்டுமின்றி புதிய வைரஸ்களும் மொபைலை தாக்கும் அபாயம் உள்ளது என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.