tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கும் ரூ.1000 நிவாரணம் வழங்க கோரிக்கை

சென்னை, ஏப்.12- அமைப்பு சாரா தொழிலா ளர்கள் உள்ளிட்ட 17 நல வாரிய உறுப்பினர்களுக்கு தமிழக அரசு  அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையை மாற்றுத்  திறனாளிகளுக்கு வழங்க உத்தரவிட அது மனவருத்தம் அளிப்பதால் உடனடியாக வழங்க வேண்டும் என்று முத லமைச்சருக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலி யுறுத்தி உள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சி ராணி, எஸ். நம்புராஜன் ஆகி யோர் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:-

கொரோனா பேரிடர் காரண மாக ஊரடங்கு அமலில் உள்ள  இந்த காலத்தில், ஏழை எளிய விளிம்பு நிலை மக்கள், வருவாய்  இழந்து கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகி யுள்ளனர். விளிம்பு நிலை மக்களிலும் விளிம்பு நிலையில் இருக்கக் கூடிய மாற்றுத் திறனாளிகளில் ஏறத்தாழ  95 விழுக்காட்டினர்  அமைப்புசாரா தொழில்களை  நம்பியும், அத்துக் கூலிகளாக வும் உள்ளதையும் தாங்கள் அறி வீர்கள். கணவன், மனைவி இரு வருமே மாற்றுத்திறனாளிகளாக உள்ள குடும்பங்களும் ஏராளம் உள்ளன. பொதுவாகப் அன்றாட  வயிற்றுப்பாட்டுக்கு அரசு மற்றும்  மற்றவர்கள் உதவிகளை நம்பி யிருக்கும் மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்கள், இந்தப்  பேரிடரை சமாளிக்க மாற்றுத்திற னாளிகள் தள்ளப்பட்டுள்ளனர். தற்போதைய ஊரடங்கு காலத்தில் விவரிக்க முடியாத அள வில் நொந்து நொறுங்கிப்போ யுள்ளனர்.

மேலும், ஊரடங்கு காரண மாக ஏழை, எளிய, நடுத்தர வர்க்க  மக்கள் வருவாய் இழந்து தவிக்கும் இந்நேரத்தில் அவர்க ளது குடும்பங்களில் உள்ள மன வளர்ச்சி பாதிப்பு, தசைச்சிதைவு பாதிப்பு, முதுகுத்தண்டுவடம் பாதிப்பு, தொழுநோய், பார்வைத்  திறன், பிரத்யேக தேவைகளு டைய மாற்றுத்திறன் பெண்கள் மற்றும் குழந்தைகள், உயர வளர்ச்சி பாதித்த, உள்ளிட்ட கடும் ஊனமுற்ற மாற்றத்திறனாளிகள், குழந்தைகளுக்கு வலிப்பு நோய்  உள்ளிட்ட அத்தியாவசிய  மருந்து மாத்திரைகள்கூட வாங்க  முடியாமல் தவிக்கின்ற செய்தி கள் எல்லாம் வந்து கொண்டிருப் பதை  என்பதை தங்கள் கவனத் திற்கு கொண்டுவர விரும்புகிறோம்.

இந்நிலையில், தமிழகத்தில்  உள்ள சுமார் 17 நலவாரியங்களில் பதிவு செய்துள்ள ஒவ்வொரு வருக்கும் தலா ரூ.1000 இந்த  பேரிடர் காலத்தில் வழங்குவதாக  அறிவித்திருப்பது வரவேற்கத் தக்கது.  ஆனால், இதுகுறித்து  தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மாற்றுத்திற னாளிகள் நலவாரியத்தை சேர்க்காதது அறிந்து அதிர்ச்சி அடைகிறோம்.  இப்படிப்பட்ட பேரிடர் காலங்களில் சிறப்பு கவ னம் எடுத்து மாற்றுத்திறனாளி களை பாதுகாக்க வேண்டும் என்பதை 2007 ஆம் ஆண்டின் ஐநா  விதிகள் மற்றும் 2016 ஊனமுற் றோர் உரிமைகள் சட்டம் வலி யுறுத்துகிறது. எனவே, அறிவிக்கப்பட்டுள்ள  மற்ற வாரியங்களைப் போன்று,  மாற்றுத்திறனாளிகள் நலவாரி  யத்தில் பதிந்துள்ள ஒவ்வொரு வருக்கும் ரூ.1000 வழங்கும் வகை யில் உரிய உத்தரவை முதல மைச்சர்  வழங்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.