districts

img

மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பயிருக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

காஞ்சிபுரம், நவ.13- காஞ்சிபுரம் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் சுமார் 12ஆயிரம் ஏக்கர் நிலத்தில் நெல், கரும்பு, வேர்கடலை-காய்கறிகள் பயிர் செய்யப்பட்டு தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தது.  இந்நிலையில் வடகிழக்கு பருவ மழையால் இந்த பயிர்கள் யாவும் நீரில் மூழ்கி நாசமாகி விட்டது. காஞ்சிபுரத்தில் காஞ்சிபுரம் வட்டம், வேலியூர், புதுப்பாக்கம், பரந்தூர், களியனூர், கீழ்கதிர்பூர் வட்டம், வாலாஜாபாத் வட்டம், உத்திரமேரூர் வட்டம், பெரும்பத்தூர் வட்டம், குன்றத்தூர் வட்டம்  உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 600 ஏக்கர்  நிலம் பாதிப்புக்குள்ளானது. பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை வேளாண்துறை வருவாய் துறை அதிகாரிகள் உரிய கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்டச்செயலாளர் கே.நேரு விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.