districts

img

மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

மயிலாடுதுறை, டிச.8-  மயிலாடுதுறை மாவட்டத் தில் கனமழையாலும், மாண்  டஸ் புயலாலும் கடந்த 25 நாட்க ளாக தொடர்ந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வாழ் வாதாரம் இழந்து தவிக்கும் மீனவ குடும்பங்களுக்கு நிவா ரணம் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு தரங்கம்பாடி  மீனவர்கள் கோரிக்கை விடுத்  துள்ளனர்.   வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்தநிலையில் நவம் பர் 11 அன்று அதீத கனமழை பெய்து மாவட்டம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து கடல் கொந்தளிப்பாக இருந்து வந்த தாலும், புயல் உருவானதாலும் கடந்த 25 நாட்களாக  மாவட் டத்திலுள்ள  28 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகினர்.  இதனால் சுமார் 50 ஆயி ரம் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டு வரு கின்றனர். 15 ஆயிரம் பைபர்  படகுகள், 400 விசை படகு களை கடற்கரையில் பாதுகாப் பாக நிறுத்தி வைத்துள்ளனர்.  குறிப்பாக, தரங்கம்பாடி வட்டத்தில் 2500 க்கும் மேற்பட்ட  மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதாக மீனவ மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.  எனவே, மாண்டஸ் புய லால் கடலுக்கு செல்லாமல் மீண்டும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்ற மீனவ குடும்பங்க ளுக்கு தமிழக அரசு உரிய நிவா ரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், விவசாயிகளை பாது காக்க கூட்டுறவு வங்கிகள் உள்ளது போல மீனவ மக்களுக்  கும் கூட்டுறவு வங்கிகளை தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.