தஞ்சாவூர், ஜூலை 11- தஞ்சை மாவட்டம் திரு ச்சென்னம்பூண்டி அரசு மணல் குவாரியை நிரந்தர மாக மூட வலியுறுத்தியும், மணல் குவாரியினால் தோ ண்டப்பட்ட பள்ளத்தில் விழு ந்து இறந்த சிறுமி மாலினி யின் குடும்பத்திற்கு இழப்பீ டாக ரூ.50 லட்சம் வழங்கிட கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட னர். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகா திருச்செ ன்னம்பூண்டியில் பொது மக்களின் எதிர்ப்பை மீறி செய ல்படும் அரசு மணல் குவாரி யில் கொள்ளிடம் ஆற்றில் கிலோ மீட்டர் கணக்கில் தோ ண்டப்பட்ட ஒரு பள்ளத்தில், அதே பகுதியில் வசித்து வரும் ரவிச்சந்திரன்-அம்பி காவதியின் 9 வயது மகள் மாலினி ஆற்றில் குளிக்கு ம்போது பள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனையடுத்து பொது மக்கள், கால்நடைகளின் உயிருக்கு எந்தவிதமான பாதுகாப்பையும் உறுதி ப்படுத்தாமலும், பகுதி யின் நிலத்தடி நீரை பாதா ளத்திற்க்கு இட்டுசெல்லும் பொதுமக்களின் கடும் எதி ர்ப்பிற்கிடையே செயல்படும் மணல் குவாரியை உடனே மூட வேண்டும்.
உயிரி ழந்த சிறுமியின் குடும்ப த்திற்கு தமிழக அரசு நிவா ரணமாக ரூ.50 லட்சம் வழ ங்கவேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனை எதிரே கண்டன ஆர்ப்பாட்டமும் சாலை மறியலும் நடை பெற்றது. சிபிஎம் மாவட்ட செய ற்குழு உறுப்பினர் வழக்கறி ஞர் சிவக்குமார், சின்னை.பாண்டியன் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் பங்கே ற்றனர். தகவல் அறிந்து வந்த வருவாய்த் துறை, காவ ல்துறை அதிகாரிகள் நட த்திய பேச்சுவார்த்தையில், அரசு மணல் குவாரியை உடனே மூடுவதாகவும், உயி ரிழந்த சிறுமியின் குடு ம்பத்திற்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க தமிழக அரசிற்கு பரிந்துரை க்கப்பட்டிருப்பதாகவும் உடனே பெற்று தருவதாக வும் அதிகாரிகள் உறுதிய ளித்ததன் பேரில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. உயி ரிழந்த மாலினியின் குடும்ப த்தினருக்கு முதற்கட்ட நிவா ரணமாக அரசு சார்பில் ரூ.3 லட்சம் அதிகாரிகளால் வழங்கப்பட்டது.