tamilnadu

img

தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, செப்.6- தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான  மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா கடற்கரை பகுதியில் ஏற்பட்டுள்ள  வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரண மாகவும், தென்மேற்கு பருவக்காற்றின் கார ணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ராமநாதபுரம், குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தஞ்சாவூர்,  நாகை, திருவாரூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், கோவை, நீலகிரி, தேனி ஆகிய 16 மாவட் டங்களில் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வும் இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதி களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.