குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து 25 அடி பள்ளத்தில் இறங்கி விபத்துள்ளாகியது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமுள்ளநிலையில், பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நீர் தேங்கியும், மண் சரிவும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மதுரையிலிருந்து, உதகையை நோக்கி புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று 25 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இப்பேருந்து குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் செல்லும்போது, லாரி ஒன்றுக்கு வழிவிட முயன்று ஓட்டுநர் சாலை ஓரத்தில் ஒதுங்கியுள்ளார். அச்சமயம் மண் சரிவு ஏற்பட்டு பேருந்து 25 அடி பள்ளத்தில் இறங்கியது. இச்சம்பவத்தால் எந்த உயிரிழப்பும் ஏற்படாமல் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.