தில்லி
நாட்டின் தலைநகர் மண்டலமான தில்லியில் கொரோனா பரவல் அதிகம் உள்ளது. தற்போது மாநிலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலில் தில்லி 3-வது இடத்தில் உள்ளது. இதுவரை அங்கு 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தாக்கத்தால் பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகள் மற்றும் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், பல்கலைக்கழகங்களின் மதிப்பீடு அளவுகளை அடிப்படையாக கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படும் எனவும், தில்லி மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக செப்டம்பர் மாத இறுதிக்குள் இறுதியாண்டு மற்றும் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.