புதுதில்லி:
மத்திய அரசை விமர்சிப்போர் மீது, பாஜக அரசு தனது கைபானங்களை ஏவி பயமுறுத்தப் பார்ப்பதாகவும், விமர்சனங்களை எதிர்கொள்வதற்கு அஞ்சுவதாகவும் பொருளாதாரப் பேராசிரியரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள்ஆளுநருமான ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கான,பொருளாதார ஆலோசனைக்குழுவிலிருந்து, அண்மையில் ரதின் ராய்மற்றும் ஷாமிகா ரவி ஆகிய பொருளாதார வல்லுநர்கள் நீக்கப்பட்ட பின்னணியில், ரகுராம் ராஜன் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:“பொதுவாக ஒவ்வொரு விமர்சகருக்கும் அரசாங்க செயற்பாட்டாளரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தால் அல்லது ஆளும்கட்சியின் கைபானங்களால் (ட்ரோல் ஆர்மி) குறிவைக்கப்பட்டால் பலர் தங்களின் விமர்சனத்தைக் குறைத்துக் கொள்வார்கள். அரசாங்கமும் இனிமையான நம்பகமான சூழலில் செயல்படுவதாக தன்னை எண்ணிக்கொள்ளும்; ஆனால் விமர்சனம்தான் காலத்திற்கேற்ற வகையில் அரசாங்கம் சரியான முடிவுகளை எடுப்பதற்குத் தூண்டுகிறது என்பதை அவர்கள் அறிவதில்லை.ஆனால், இனி கடுமையான உண்மையை மறுக்க முடியாது. அதிகாரத்தில் உள்ளவர்கள் விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும்.பத்திரிகைகள் உட்பட சில விமர்சனங்கள் தவறான தகவல்களாகவும் தனிப் பட்ட தாக்குதல்களாகவும் இருப்பதை மறுக்க முடியாது. ஆனாலும், விமர் சனத்தை கட்டுப்படுத்துவது தீய செயல்முறையாகவே இருக்கும்.விமர்சனம்தான் கொள்கைகளை சரி செய்ய அனுமதிக்கிறது; விமர் சனங்களை அடக்கும் அரசாங்கங்கள் தங்களைத் தாங்களே அவதூறு செய்துகொள்வதாகவே அர்த்தம்.இவ்வாறு ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.