புதுதில்லி:
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன், தனது பதவியை ராஜினாமா செய்தபின், சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவ்வப்போது இந்தியப் பொருளாதாரம் குறித்து கருத்து தெரிவிக்கும் அவர், இரண்டு நாட்களுக்குமுன்பு, தில்லியில் உள்ள ‘சிகாகோ பூத் ஸ்கூல் ஆப் பிசினெஸ்’ கல்விமையம் நடத்திய காணொலி சந்திப்பில் பங்கேற்று உரையாற்றியுள் ளார். அதில், இந்தியாவில் கொரோனாதொற்றின் 2-ஆவது அலை ஏற்படுத்தியுள்ள பாதிப்பு குறித்து பேசியிருப்பதாவது:
கொரோனா வைரஸ் பெருந் தொற்று, இந்தியாவுக்கு மிகவும் வேதனையைக் கொடுத்துள்ள நேரம்இது. சுதந்திரத்துக்கு பிறகு இந்தியாசந்திக்கும் மிகப்பெரிய சவால்கொரோனா வைரஸ் பெருந்தொற் றாகத்தான் இருக்கும் எனநினைக்கிறேன்.இந்தியாவில் சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார் 3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பதிவாகிக் கொண்டிருக்கிறது. சமீபமாக உயிரிழப்போரின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. கொரோனா முதல் அலை இந்தியாவைத் தாக்கும்போது, நாடு முழுவதும் போடப்பட்ட ஊரடங்கால் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சவாலான சூழல் எழுந்தது. ஆனால்,இப்போது 2-ஆவது அலையின் போது, பொருளாதார ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியிலும் மக்களுக்கு சவால்கள் எழுந்து உள்ளன. நாம் முன்னேறும்போது, சமூக ரீதியான பங்கும் இனி இருக்கும்.
நாடு முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கும், ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு நிலவி வரும் வேளையில் மகாராஷ்டிரா அரசு நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் படுக்கைகளை வழங்கி சிறப்பாக நிர்வகித்து வருகிறது. கொரோனா வைரஸின் மிகப் பெரிய பாதிப்புகளில் ஒன்று, பல் வேறு இடங்களில், மக்களுக்கு உதவஅரசு என்பதே இல்லாமல் இருந்தது என்பதாகும். பல இடங்களில் அரசால் மக்களுக்கு உதவ முடியவில்லை. அரசு இயந்திரம் வேலை செய்யவில்லை. கொரோனா பெருந்தொற்று முடிந்தபின் நாம் சமூகத்தை நோக்கிதீவிரமாக கேள்வி கேட்காவிட்டால், அது தொற்றுநோயைப் போலவே பெரிய சோகத்தை நம்மிடம் விட்டுவிட்டுச் செல்லும். இந்தப் பெருந்தொற்று கடந்து செல்லும்போது, அரசாங்கங்கள் கூட தோல்வி அடைந்து, நம்பிக்கையற்ற சூழலுக்கு செல்லும் என்றேநான் நினைக்கிறேன். ஆனால் அரசாங்கத்திற்குள்ளும் அரசாங்கத் திற்கு வெளியேயும் போதுமான மக்கள் பேச வேண்டும்.
இல்லையெனில் நாட்டில் ஒரு பேரழிவு ஏற்படுகிறது என்றுதான் எடுத்துக் கொள்ளமுடியும்.தற்போது, இந்த பெருந்தொற்று காலம் நாம் அனைவரையும் ஒன்றுசேர்த்துள்ளது, எந்த ஆணும், பெண்ணும் தனித்து தீவில் விடப்படவில்லை.இந்நிலையில், நாட்டில் சீர்திருத்தம் என்பது மறைமுகமாக இருக்காமல் நேரடியாக இருக்க வேண்டும். மேலும் சிறு, குறு, நடுத்தர துறைகளுக்கு விரைவாக திவால் செயல்முறையை அரசு அறிவிக்க வேண் டும்.நான் கடந்த 2015-ஆம் ஆண்டுஅக்டோபர் 31 அன்று தில்லி ஐஐடியில் பேசும்போது, ‘கருத்துக்களுக் கான சூழலை மேம்படுத்துவதற்கு சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர மரியாதை அவசியம். எந்தவொரு குறிப்பிட்ட குழுவிற்கும் உடல் ரீதியானதீங்கு அல்லது வாய்மொழி அவமதிப்பை அனுமதிக்கக் கூடாது’ என்று கூறியிருந்தேன். இது அரசுக்கு எதிரானது அல்ல. ஆனால், நான் பேசியது பலநேரங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டு விட்டது.நமக்கு பேச்சு சுதந்திரம், விமர் சிக்கும் சுதந்திரம் அவசியம். இதுவே 21-ஆம் நூற்றாண்டுக்கு நம்மை தயார் செய்யும்.இவ்வாறு ரகுராம் ராஜன் பேசியுள்ளார்.